தாம்பத்யம் அமோகமா இருக்கணுமா? படுக்கையறையில் தப்பி தவறி கூட இந்த 5 நிறங்கள் வேண்டாம்!
சிலர் உறவில் அடிப்படை விஷயங்கள் மாறுவதால் உண்டாவதாகவும் வேறு சிலர் மேற்கத்திய நாகரிக்கத்தின் தாக்கத்தால் எனக் கருதுகின்றனர்.
பல தசாப்தங்களாக திருமண உறவில் மகிழ்ச்சி என்பது நிலையற்ற ஒன்றாகவே இருந்து வருகிறது. சிலர் உறவில் அடிப்படை விஷயங்கள் மாறுவதால் உண்டாவதாகவும் வேறு சிலர் மேற்கத்திய நாகரிக்கத்தின் தாக்கத்தால் எனக் கருதுகின்றனர். எவ்வாறாயினும், விவாகரத்தும் திருமண உறவில் பிரிவதும் மேற்கூறிய காரணங்களின் தாக்கமாக இருக்கலாம். அதனால் திருமண உறவில் உள்ளார்ந்த அம்சங்களைப் பேசுவது தேவையானதாக இருக்கிறது. தற்போதைய கொரோனா சர்வதேசத் தொற்று காலத்தில் உறவில் நிலைத்தன்மை இன்மை இன்னும் அதிகரித்து நிலைமை மோசமடைந்துள்ளது. இதையடுத்து வாஸ்து அறிவியலில் திருமண உறவை மேம்படுத்த ஏதேனும் ரகசிய வழிமுறைகள் இருக்கிறதா எனக் கேட்டோம்.
திருமண மகிழ்ச்சிக்கான முதன்மையான திசை மண்டலமாக வீட்டின் தென்மேற்கு திசை உள்ளது. வாஸ்து ஆலோசகர்கள் தென்மேற்கில் மாஸ்டர் படுக்கையறை கட்டச் சொல்லி ஆலோசனை வழங்குவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இது நிலைத்தன்மை மற்றும் திறன்களின் திசையாகும். இந்த மண்டலத்தில் நீங்கள் தூங்கும்போது, அது உங்கள் தொழிலில் வெற்றிபெற தேவையான நிலைத்தன்மை மற்றும் திறன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், திருமண மகிழ்ச்சிக்கான பண்புகளையும் வழங்குகிறது. இந்த மண்டலத்தில் கழிப்பறை கட்டப்படும்போது அது திருமணத்திலிருந்து மகிழ்ச்சியை வெளியேற்றுகிறது. இது வாழ்க்கையில் நிறைய திருமண முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, நீங்கள் இந்த மண்டலத்தில் தூங்குவதாக உணர்ந்தால், உங்கள் படுக்கையை தென்மேற்கு மண்டலத்தின் தெற்கில் தூங்காதவாறு சற்று மாற்றி உறங்கவும்.
சிவப்பு, வாடாமல்லி,வையலட், பச்சை மற்றும் நீலம் ஆகியவை தென்மேற்கில் அமைந்துள்ள படுக்கையறையில் சுவர் வண்ணங்கள் மற்றும் அலங்காரங்களின் வண்ணம் ஆகிய இரண்டிலும் தவிர்க்கப்பட வேண்டிய வண்ணங்கள். மேலும் வாஸ்து நிபுணர் திருமண மகிழ்ச்சியைக் குறிக்கும் பின்வரும் சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தென்மேற்கு மண்டலத்தில் வைக்குமாறு பரிந்துரைக்கிறார். அதாவது, ஒரு ஜோடி அண்ணம், ஒரு ஜோடி மாண்டரின் வாத்துகள், பியோனி பூக்கள் அல்லது இரட்டை மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஏதோ ஒரு சின்னத்தை இந்தப் பகுதியில் வைக்கவும்.
நவீன நாட்களில் கட்டுமானமானது அதிகபட்ச இடத்தை ஆக்கிரமிக்கிறது மற்றும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கும் போது சரியான சூரிய ஒளி மற்றும் இயற்கையான காற்றோட்டம் ஆகியவை முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இதனால், வருடத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றோட்டமில்லாமல் வீடு புழங்குகிறது.
சூரிய ஒளி மற்றும் இயற்கையான காற்று இல்லாமல் போவது உங்கள் உடல் சுறுசுறுப்பு மற்றும் மன அமைதியை பாதிக்கிறது, வாரத்திற்கு ஒரு முறை ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை இயற்கையான காற்று மற்றும் வெளிச்சத்தை வீட்டிற்குள் வருமாறு அறிவுறுத்துகிறார் வாஸ்து நிபுணர். இதுவே உங்கள் மனநிலையிலும் உங்கள் துணையின் மனநிலையிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும்.