வாஷிங் மெஷின் இல்லையா? கையில்தான் துணிகளை துவைக்கிறீங்களா? ஈஸியான டிப்ஸ் இதோ..
கையால் துணி துவைக்க 4 எளிய வழிகள் உள்ளன. அப்படியா சொல்லுங்க என்ற உங்களின் ஆவல் எங்களுக்குப் புரிகிறது. என்னதான் வாஷிங் மெஷின் இருந்தாலும் சில துணிகள் கையால் துவைக்கப்பட வேண்டியவை.
கையால் துணி துவைக்க 4 எளிய வழிகள் உள்ளன. அப்படியா சொல்லுங்க என்ற உங்களின் ஆவல் எங்களுக்குப் புரிகிறது. என்னதான் வாஷிங் மெஷின் இருந்தாலும் சில துணிகள் கையால் துவைக்கப்பட வேண்டியவை. சில துணிகள் நிறம் சாயம் போகும் என்பதால் தனியாக துவைக்க வேண்டியிருக்கும். வெள்ளைத் துணிகளும் அப்படித்தான். கையால் துவைத்தால் அது ஒரு தனி சுத்தமாக இருக்கும். அப்படி கையால் துவைக்கும் போது ஐய்யோ என்று புலம்பும் அளவுக்கு வேலைப் பளுவாகத் தெரியும். அதற்குத் தான் இந்த 4 எளிய டிப்ஸ்.
வெந்நீர் உபயோகிக்கவும்:
எப்போதுமே வெந்நீர் பயன்படுத்துங்கள். அதேவேளையில் எந்தத் துணியை எந்த அளவு சூடான நீரில் ஊறவைக்கலாம் என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப சுட வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு டப்களில் தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். இதனால் தண்ணீர் பயன்பாடு அளவுக்கு அதிகமாக செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
நிறம் வெளுக்கும் வாய்ப்புள்ள துணிகளுக்கு அதிகம் கவனம் தேவை:
நிறம் வெளுக்கும் வாய்ப்புள்ள துணிகளுக்கு சற்று அதிகமாக செலுத்த வேண்டும். நிறம் வெளுக்கும் வாய்ப்புள்ள துணிகளுக்கு அதிகம் கவனம் தேவை:
நிறம் வெளுக்கும் வாய்ப்புள்ள துணிகளுக்கு சற்று அதிகமாக கவனம் செலுத்த வே அடர் நிற துணிகளை தனியாக ஊற வையுங்கள். அதேபோல் வெளிர் நிற துணிகளை தனியாக ஊற வையுங்கள். இவ்வாறு செய்வதால் துணிகளின் நிறம் வெளுத்துப் போகாமல் இருக்கும். இதனால் சாயம் கலந்து துணிகள் வீணாகமால் பாதுகாக்கலாம்.
துணிகளை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்:
துணிகளை ஊற வைக்கும் போது குறைந்தது 15 முதல் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். இத்துடன், துணிகளை சுத்தம் செய்யும்போது ப்ரஷ் போட வேண்டாம். அது துணிகளை சேதப்படுத்தும். துணிகள் சீக்கிரமே கிழிந்துபோகும் வாய்ப்பும் உருவாகும்.
துணிகளில் கறைபடிந்தால் டிடர்ஜென்ட் பயன்படுத்தவும்
உங்கள் துணிகளை கையால் துவைக்கும்போது குளியலறை தரை சுத்தமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். இல்லாவிட்டால் அந்தக் கறை உங்கள் ஆடைகளில் ஒட்டிக் கொள்ளும். அவ்வாறு கறை படிந்துவிட்டால் சிறிது நேரம் டிடர்ஜென்ட் ஊற்றி ஊறவைத்து பின்னர் அலசி எடுக்கவும்.
இதுபோன்ற சின்னச்சின்ன நுணுக்கங்களைப் பின்பற்றினால் கையில் துணி துவைப்பது எளிதாக இருக்கும். வெளியில் விடுதியில் தங்கியிருக்கும் போதும் கூட பொதுவான லாண்ட்ரி மெஷினில் துணிகளைப் போடுவதைத் தவிர்த்து இவ்வாறாக நம் துணிகளை அன்றாடம் துவைத்துக் கொண்டால் சுத்தம் சுகாதாரம் கேரன்ட்டி.
உங்கள் வெள்ளைத் துணியை வெளியாக்க எளிய டிப்ஸ்:
View this post on Instagram