அடிக்கடி கழுத்து வலிக்கிறதா...? இந்த 3 யோகா தெரிந்தால் போதும்!
வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் வந்ததில் இருந்து பெரும்பாலோனோர் கழுத்து வழியால் அவதி படுகின்றனர். ஒரு நாள் வலி வந்தால் தொடர்ந்து வலி வந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் வந்ததில் இருந்து பெரும்பாலோனோர் கழுத்து வழியால் அவதி படுகின்றனர். ஒரு நாள் வலி வந்தால் தொடர்ந்து வலி வந்து கொண்டே இருக்கும் இதில் இருந்து மீண்டுவர ஓய்வும், யோகா பயிற்சியும் உதவும்.
யோகா ஆனது இந்தியாவில் தோன்றிய ஒரு கலை . இன்று உலகளவில் பெரும்பாலோனோர் விரும்பி செய்யும் ஒரு உடற்பயிற்சியாக யோகா இருந்து வருகிறது. இது உடல் மற்றும் மனம் இரண்டையும் ஒரே சீராக இயங்க வைக்க உதவியாக இருக்கும்.
சில யோகா பயிற்சிகள் முதுகு தண்டு வடத்தை வலுவாக்கவும், வளைவு தன்மையை அதிகபடுத்தவும் உதவுகிறது. இது வலிகளை குறைத்து நாளை புத்துணர்வுடன் வைக்க உதவுகிறது. தினம் 30 நிமிடம் பயிற்சி செய்வது, புத்துணர்வுடன், வேலை செய்ய உதவும்.
ஷஷாங்காசனம் - குழந்தை நிலை - சமதளத்தில், விரிப்பின் மீது அமர்ந்து இருக்கவும். முழங்கால் மடித்து அமர்ந்து , மூச்சை உள்ளிழுத்து, இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, மூச்சை வெளியில் விட்டுக்கொண்டே முன்னோக்கி குனியவும். உங்களது நெற்றி தரையில் இருக்க வேண்டும். இரண்டு கைகளும் முன்னோக்கி நீட்டி இருக்க வேண்டும். இடுப்பு இரண்டு கால்களின் மீது அமர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இந்த நிலையில் இருந்து 10 முறை இயல்பான சுவாசம் எடுத்து கொள்ள வேண்டும்.
மர்ஜரி ஆசனம் - பூனை நிலை - தரையில் முட்டி போட்டு இருக்க வேண்டும். இரண்டு கைகளையும், முழங்காலுக்கு நேராக குறைந்த இடைவெளி விட்டு முன் வைத்து கொண்டு, முதுகு கழுத்து தண்டுவடம் ஆகிய வற்றை மேலே கீழே அசைக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்து மேல் நோக்கி பார்க்க வேண்டும். மூச்சை விட்டு கொண்டே கீழ் நோக்கி பார்க்க வேண்டும். இதே போன்று சுவாசத்துடன், 10 முறை செய்ய வேண்டும்.
பயன்கள் - இந்த பயிற்சிகள் செய்வதால், முதுகு தண்டு ரிலாக்ஸாக இருக்கும். இரத்த ஓட்டம் சீராகும். கழுத்து வலி, முதுகு வலி குறையும்.
சவாசனம் - ஓய்வு நிலை - இந்த பயிற்சி மிகவும் எளிமையானது. விரிப்பில் படுத்து கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும், ஓய்வாக வைத்து கொண்டு, இரண்டு கைகளையும் உடலில் இருந்து கொஞ்சம் நகர்த்தி வைத்து விட்டு, தலை, கழுத்து , முதுகு தண்டு, கால்கள், கைகள் அனைத்தும் ரிலாக்ஸாக வைத்து, ஆழ்ந்த சுவாசம் எடுத்து கொள்ள வேண்டும். இது உடலில் இருக்கும் அனைத்து வலிகளும் குறைந்து, லேசாக இருக்கும். இந்த பயிற்சி செய்வது உடலுக்கும், மனதுக்கும் சிறந்த ஓய்வை தரும்.
இந்த மூன்று பயிற்சிகளும் தினம் செய்வதால், உடலும் , மனதும் ரிலாக்ஸாக இருக்கும். கழுத்து வலி, முதுகு வலி வராமல் இருக்கும். தினம் ஒரு 10 - 15 நிமிடங்கள் போதும் இந்த பயிற்சிகள் முடிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

