மேலும் அறிய

TN Entrepreneur : தொழில்முனைவோராக மாற ஆசையா? ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேரலாம்: அரசு அழைப்பு

 சிறந்த பாடத்திட்டம், நவீன நூலகங்கள், அனுபவமிக்க பயிற்றுநர்கள், நவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகியவை இப்பயிற்சியின் சிறப்பம்சங்கள் ஆகும்.

தொழில் முனைவோராக மாற விருப்பம் உள்ளவர்கள் ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மற்றும் இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) அகமதாபாத் இணைந்து ‘தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்’ என்ற ஓராண்டு சான்றிதழ் (One year Certificate Course on Entrepreneurship and Innovation) படிப்பைத் தொடங்கவுள்ளது.

அக்டோபர் 14 முதல் வகுப்புகள்

இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அகமதாபாத் தொழில்முனைவோரை உருவாக்குவதில் தனக்குள்ள நெடிய அனுபவத்தினை இப்படிப்பின் பாடத்திட்டத்தினை உருவாக்குதல் மற்றும் வல்லுநர்களின் மூலம் பயிற்றுவிப்பது வழியாக பகிர்ந்தளிக்கிறது. இதற்கான வகுப்புகள் வரும் அக்டோபர் 14, 2024 அன்று தொடங்க உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலம் https://oneyearcourse.editn.in/management/form/admissions/ வரவேறகப்படுகின்றன. இந்த பாடத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.80,000 கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

21 வயது முதல் 40 வயதுக்குட் உபட்ட பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ பிரிவுகளில் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் இந்த பயிற்சியில் சேரத் தகுதி உடையவர்கள் ஆவர். இது ஒரு தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். எனவே, தொழில்முனைவோராக மாற முயற்சிக்கும் ஒவ்வொரு ஆர்வலர்களுக்கும் இது ஓர் அரிய வாய்ப்பு ஆகும்.

பயிற்சியின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

 சிறந்த பாடத்திட்டம், நவீன நூலகங்கள், அனுபவமிக்க பயிற்றுநர்கள், நவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகியவை இப்பயிற்சியின் சிறப்பம்சங்கள் ஆகும்.

 மேலும், விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும் மற்றும் 8668101638 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://oneyearcourse.editn.in/management/form/admissions/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

தொலைபேசி எண்கள்: 8668101638, 8668107552

கூடுதல் தகவல்களுக்கு: https://oneyearcourse.editn.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Embed widget