மேலும் அறிய

அறநிலையத் துறையில் வேலை: சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

திருக்கோயிலில் பல்வேறு பணிக்களுக்கான விண்ணப்பத்தை ஏகாம்பரேஸ்வர் கோவில் அலுவலகத்தில் நேரில் வந்து ரூ. 100  செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள ஏகாம்பரேஸ்வர் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 44,218 கோயில்கள் இயங்கிவருகின்றனர். இவை அனைத்தையும் நிர்வகிக்க, கூடுதல் ஆணையர் (விசாரணை), கூடுதல் ஆணையர் (திருப்பணி), இணை ஆணையர் (தலைமையிடம்), இணை ஆணையர் (சட்டச்சேர்மம்), இணை ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்), இணை ஆணையர்(சரிபார்ப்பு-தலைமையிடம்), உதவி ஆணையர் (சட்டச்சேர்மம்), உதவி ஆணையர் (கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீ்ழ் பலர் பணியாற்றி வருகின்றனர். இருந்தப்போதும் ஒவ்வொரு கோயில்களிலும் நிர்வகிக்க பலர் பணியமர்த்தப்படுகிறார்கள். அதன்படி, இந்து சமய அறிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் தட்டச்சர், ஓதுவர், கால்நடை பராமரிப்பாளர் என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் என்னென்ன தகுதிகளைக்கொண்டிருக்க வேண்டும் எனவும் விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்..

  •  அறநிலையத் துறையில் வேலை: சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

தட்டச்சர் பணிக்கானத் தகுதிகள்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி மற்றும் அரசு தொழில் நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இதோடு கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியைக்கொண்டுள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் ரூ. 15,300 சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அர்ச்சகர் பணிக்கானத் தகுதிகள்: சென்னை ஏகாம்பரேஸ்வர் திருக்கோயிலின் அர்ச்சகராக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழில் எழுத படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆகம பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ்களை கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.11, 600 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று  பரிசாரகர்,  மேளம் செட்,  காவலர், இரவு காவலர்,  கால்நடை பராமரிப்பாளர்,   ஓதுவார் ஆகிய அனைத்துப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கட்டாயம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் 35 வயதிற்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத் துறையில் வேலை: சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

எனவே மேற்கண்ட தகுதியும் , ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், இப்பணிக்கான விண்ணப்பத்தை திருக்கோவில் அலுவலகத்தில் நேரில் வந்து ரூ. 100  செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனையடுத்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்த விண்ணப்பத்தோடு உரிய சான்றிதழ்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின் கையொப்பம் பெற்று  இணைத்து விண்ணப்பங்களை செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சென்னை - 3 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget