மேலும் அறிய

10-ஆம் வகுப்பு முடித்தவர்களா? தேர்வே கிடையாது.. இப்படி விண்ணப்பிங்க.. குவிந்திருக்கும் வாய்ப்புகள்..

நாடு முழுவதும் 38,296 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 4,310 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தபால் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட வேலை வாய்ப்புக்கு விண்ணபிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளது.

அரசுத்துறைகளில் பொதுவாக கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பிப்பவர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். அந்த வகையில் இந்திய அரசின் தபால் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தபால் அலுவலர் மற்றும் மற்றும் உதவி தபால் அலுவலர் பணியிடங்களில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. நாடு முழுவதும் 38,296 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 4,310 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. அதேசமயம் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கான ஊதியமாக தபால் அலுவலர் பணிகளுக்கு ரூ.12 ஆயிரமும், உதவி தபால் அலுவலர் பணிகளுக்கு ரூ.10 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விண்ணப்பிக்க விரும்புவர்களில் பெண்கள், திருநங்கைகள், எஸ்சி/எஸ்டி  வகுப்பினர் இலவசமாக விண்ணப்பிக்க முடியும் என்றும், மற்றவர்களுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வயது வரம்பு 18-இல் இருந்து 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மொழி தெரிந்த நபராக இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை  நேரடியாக அருகிலிருக்கும் அஞ்சல் அலுவலகத்திலும் செலுத்தலாம்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று நோட்டிபிகேஷன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் வரும் Validate your details பகுதியில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து SUBMIT என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் ஆதார் எண், புகைப்படம், கையெழுத்து, தடையில்லா சான்றிதழ் போன்றவறை சமர்பித்து கொடுக்கப்பட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.  

இதனைத் தொடர்ந்து மீண்டும் https://indiapostgdsonline.gov.in/ சென்று Apply online என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களுடைய ரிஜிஸ்டர் எண் மற்றும் எந்த மாநிலத்தில் வேலை செய்ய வேண்டும் என தேர்வு செய்திருந்தீர்களோ அதை பதிவு செய்தால் உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதனை பதிவிட்டால் விண்ணப்ப படிவம் தோன்றும்.அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற இணையதளத்தை பார்வையிடவும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகசாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகசாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகசாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகசாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
நாளை கூடுகிறது சட்டசபை.! பிளான் போடும் அதிமுக, பாஜக - எதிர்த்து அடிக்க தயாராகும் திமுக
நாளை கூடுகிறது சட்டசபை.! பிளான் போடும் அதிமுக, பாஜக - எதிர்த்து அடிக்க தயாராகும் திமுக
Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
Embed widget