மேலும் அறிய

TNPSC: ரூ.2.11 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி... எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!

TNPSC: ஒருங்கிணைந்த நூலக பணிகள் / சாரிநிலைப் பணிகளில் அடங்கிய பதிவிகளுக்கான காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த நூலக பணிகள் / சாரிநிலைப் பணிகளில் அடங்கிய பதிவிகளுக்கான காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு இம்மாதம் 23- ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்முகத் தேர்விற்கான பதவிகள், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் என இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியிடங்கள் குறித்த விவரங்களை கீழே காணலாம்.

பணி விவரம்:

நேர்முகத் தேர்விற்கான பதவிகள்

  • கல்லூரி நூலகர் -8
  • நூலகர் மற்றும் தகவல் அலுவலர் - 1
  • மாவட்ட நூலக அலுவலர் - 3

நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்

  • நூலக உதவியாளர் -2
  • நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை - II - 22

மொத்த பணியிடங்கள் : 36

கல்வித் தகுதி: 

கல்லூரி நூலகர் பணிக்கு நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதே துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

 நூலகர் மற்றும் தகவல் அலுவலர், மாவட்ட நூலக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நூலகர் பணியில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.  மாவட்ட நூலக அலுவலர் பணியிடத்திற்கு மூன்றாண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு விண்ணப்பிக்க நூலக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

  • பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு  உச்ச வயது வரம்பு இல்லை. 
  • நேர்முகத் தேர்வு உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏனையோர்க்கு அதிகபட்ச வயதுவரம்பு 37 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
  • கல்லூரி நூலகர் பணிக்கு ஏனையோர் 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
  • நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு விண்னப்பிக்க ஏனையோர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

  • கல்லூரி நூலகர் - மாதம் ரூ.57,700 முதல் ரூ. 2,11,500  வரை ஊதியமாக வழங்கப்படும். 
  • நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (அண்ணா நூற்றாண்டு நூலகம்) -  மாதம் ரூ.56,100 முதல் ரூ. 2,05,700  வரை ஊதியமாக வழங்கப்படும். 
  • மாவட்ட நூலக அலுவலர் - மாதம் ரூ.56,100 முதல் ரூ. 2,05,700  வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • நூலக உதவியாளர் - மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,30,400  வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை - மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900  வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: 

நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150

நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு - ரூ.200

நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு மட்டும் - ரூ.100

TNPSC: ரூ.2.11 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி... எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!

தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்: 

TNPSC: ரூ.2.11 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி... எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!

ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு:

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

எழுத்துத் தேர்வு மையங்கள்:

இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்விற்கான பதவிகள்

இதற்கு எழுத்துத் தேர்வு, கணினி வழி தேர்வு ,நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
TNPSC: ரூ.2.11 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி... எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்: 

TNPSC: ரூ.2.11 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி... எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!

எப்படி விண்ணப்பிப்பது?

www.tnpscexams.in / www.tnpsc.gov.in- ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

TNPSC: ரூ.2.11 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி... எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!

கவனிக்க

* தேர்வாணையத்தின்‌ தெரிவுகள்‌ அனைத்தும்‌ விண்ணப்பதாரரின்‌ தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.

*  பொய்யான வாக்குறுதிகளைச்‌ சொல்லி, தவறான வழியில்‌ வேலை வாங்கித்‌ தருவதாகக்‌ கூறும்‌ இடைத்தரகர்களிடம்‌ விண்ணப்பதாரர்கள்‌ மிகவும்‌ கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்‌.

* இது போன்ற தவறான மற்றும்‌ நேர்மையற்றவர்களால்‌ விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும்‌ எவ்வித இழப்புக்கும்‌ தேர்வாணையம்‌ எந்தவிதத்திலும்‌ பொறுப்பாகாது.

* இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும்‌ அனைத்துத்‌ தகவல்களுக்கும்‌ விண்ணப்பதாரரே முழுப்‌ பொறுப்பாவார்‌. விண்ணப்பதாரர்‌, தேர்விற்கு இணையவழியில்‌ விண்ணப்பிக்கும்பொழுது, ஏதேனும்‌ தவறு ஏற்படின்‌, தாங்கள்‌ விண்ணப்பித்த இணையச்சேவை மையங்களையோ, பொதுச்‌

சேவை மையங்களையோ குற்றம்‌ சாட்டக்‌ கூடாது. விண்ணப்பதாரர்‌ பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும்‌ முன்னர்‌, நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்‌.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.03.2023

இது தொடர்பான  முழு விவரத்திற்கு அறிவிப்பின் https://tnpsc.gov.in/Document/tamil/04_2023_Combined%20Library%20_Tamil.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.