TNHRCE Jobs: பழனி கோயிலில் வேலைவாய்ப்பு; ரூபாய் 1.16 லட்சம் வரை மாத ஊதியம்; விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி!
TNHRCE Jobs: தண்டாயுதபாணி திருக்கோயிலில் உள்ள பணி வாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகளை இங்கே காணலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துனர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளித்துறை, தொழில்நுட்ப பிரிவு என மொத்தம் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை பற்றி காணலாம். விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி. மறந்துடாம வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க.
பணியிட விவரம்:
வெளித்துறை பணியிடங்கள்
- தட்டச்சர்
- நூலகர்
- கூர்க்கா
- அலுவக உதவியாளர்
- உதவி சமையல்
- காவல்
தொழில்நுட்ப பணியிடங்கள்
- கணினி பொறியாளர்
- இளநிலை பொறியாளார்
- வரைவாளர் சிவில்
- தொழில்நுட்ப உதவியாளர்
- பிளம்பர்
- ஃபிட்டர்
- மிசின் ஆப்ரேட்டர்
- ஓட்டுநர்
- நடத்துனர்
- க்ளீனர்
- மருத்துவர்
தட்டச்சர், நூலகர் ஆகியவற்றை உள்ளடக்கிய வெளித்துறை பிரிவின் கீழ் 174 பணியிடங்களும், கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப பிரிவின் கீழ் 82 இடங்களும்; நாதஸ்வரம், தவில் ஆகிய உள்துறை பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்களும்; ஆசிரியை, ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 19 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பணியிட விவரங்கள் குறித்த முழு விவரத்தினை அறிவிப்பில் தெரிந்துகொள்ளவும்.
மொத்த பணியிடங்கள் - 281
கல்வித் தகுதி
தொழில்நுட்ப பிரிவிற்கு தேவையான தகுதிகளை கொண்டிருக்க வேண்டும். ஆசியர் பணிக்கு அதற்கான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பொறியாளர் பணிகளுக்கு இளநிலை அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் விண்ணப்பதாரர்கள், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு
01.07.2022 இன் படி. 18 வயது நிரம்பியவராகவும், 45 வயதிற்கு மிகாமலும் இருப்பவர்களே இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனி தனியே வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து அறநிலைத் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதை படித்து தெரிந்துகொள்ளவும்.
ஊதிய விவரம்
- தட்டச்சர் - ரூ.18,500- ரூ.58,000/-
- நூலகர் - ரூ.18,500- ரூ.58,000/-
- கூர்க்கா - ரூ.11,600- ரூ.36,800/ -
- அலுவலக உதவியாளர் - ரூ.15,900- ரூ.50,400/ -
- உபகோவில் பல வேலை - ரூ.11,600/- ரூ.36,800/-
- உதவி சமையல் - ரூ.11,600- ரூ.36,800/-
- ஆயா - ரூ.15,900- ரூ.50,400/-
- பூஜை கோவில் - ரூ.15,900- ரூ.50,400/-
- உப கோயில் - ரூ.11,600/ரூ.36,800
- காவல் - ரூ.15,900 - ரூ.50,400/-
- பாத்திரசுத்தி - ரூ.15,700-ரூ.50,000/-
தொழில்நுட்பம்
- கணிணி பொறியாளர் - ரூ.35,900 - ரூ.1,13.500/-
- இளநிலை பொறியாளர் - ரூ.35,900 - ரூ.1,13.500/-
- வரைவாளர் (சிவில்) - ரூ.20,600 - ரூ.65,500/-
- வரைவாளர் - ரூ.20,600 - ரூ.65,500/-
- தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) - ரூ.20,600 - ரூ.65,500/-
- தொழில்நுட்ப உதவியாளர் (மின்) - ரூ.20,600 - ரூ.65,500/-
- ஹெச்.டி ஆபரேட்டர் - ரூ.18,200 - ரூ.57,900/-
- பம்ப் ஆபரேட்டர் - ரூ.18,000 - ரூ.56,900/-
- ப்ளம்பர் - ரூ.18,000 - ரூ.56,900/-
- தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குபவர் - ரூ.16,600 - ரூ.52,400/-
- ஃபிட்டர் (3) - ரூ.18,000 - ரூ.56,900/-
- வின்ச் மெக்கானிக் - ரூ.16,600 - ரூ.52,400/-
- வின்ச் ஆபரேட்டர் - ரூ.16,600 - ரூ.52,400/-
- மிசின் ஆபரேட்டர் - ரூ.16,600 - ரூ.52,400/-
- டிராலி கார்டு - ரூ.16,600 - ரூ.52,400/-
- ஓட்டுனர் - ரூ.18,500 - ரூ.58,600/-
- நடத்துனர் - ரூ.16,600 - ரூ.50,400/-
- க்ளீனர் - ரூ.15,700 - ரூ.50,000/-
- மருத்துவர் - ரூ.36,700 - ரூ.1,16.200/-
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கான விண்ணப்பப் படிவத்தை https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203 - மற்றும் https://hrce.tn.gov.in/hrcehome/index.php - ஆகிய இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் -624 601
அறிவிப்பும் முழு விவரத்திற்கு https://drive.google.com/file/d/11KGGZ-irPJYVRmHB8tm1tidPj7yJyW3G/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய https://drive.google.com/file/d/1Ilr9_h-pdsDqqRgG3-5ayB3d3nYhEU_k/view- என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.
விண்ணபிக்க கடைசி தேதி 07.04.2023 மாலை 5.45 மணி.