Job Alert: கம்யூட்டர் சயின்ஸ் படித்தவரா? மாவட்ட அலுவலகத்தில் வேலை; ரூ.30,000 ஊதியம் - முழு விவரம்!
Job Alert: சித்த மருத்துவ அலுவலகத்தில் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு சித்த மருத்துவ அலுவலகத்தில் ஆயுஷ் பிரிவில் NHM திட்டத்தின் கீழ் காலியாக உள்ள ப்லவேறு பணியிடங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
மாவட்ட திட்ட மேலாளார்
தரவு உதவியாளர்
மருந்து வழங்குவர்
பல்நோக்கு சுகாதார பணியாளர்
கல்வித் தகுதி
மாவட்ட திட்ட மேலாளர் பணிக்கு (BAMS/BUMS/BHMS/BSMS/BNYS) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தரவு உதவியாளர் பணிக்கு பி.டெ., பி.சி., பி.பி.ஏ. பி.எஸ்.சி. ஐ.டி, கம்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மருந்து வழங்குவர் பணிக்கு இரண்டு ஆண்டுகால Pharmacist படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணி இடம்:
வடக்கூர், ஆலத்தூர், செருவாவிடுதி, சில்லத்தூர், மதுக்கூர், சோழபுரம், பண்டாரவடை, குருவிக்க்ரம்பை, வாண்டையார் இருப்பு, பூதலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அலுவலகளில் நியமிக்கப்படுவர்.
ஊதிய விவரம்:
மாவட்ட திட்ட மேலாளர் - ரூ.30,000/-
தரவு உதவியாளர்- ரூ.15,000/-
மருந்து வழங்குபவர் - ரூ.750 / Per Session
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின் சான்றிதழ்களுடன் இணைத்து அலுவலகத்தில் அஞ்சல் மூலமோ சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
செயற் செயலாளர்,
மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
காந்திஜி ரோடு, எல்.ஐ.சி. கட்டிடம் அருகில்,
தஞ்சாவூர் - 613 001
தொடர்புக்கு - 04362 - 273603
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.12.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2023/12/2023120432.pdf
- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் வேலை
மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் (Navodaya Vidyalaya Samiti School) காலியாக உள்ள பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்
துணை ஆணையர் ( Deputy Commisioner - Finance)
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதய வித்யாலயா சமிதி பள்ளியில் Deputation முறையில் பணிசெய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுகிறது. நிதி துறையில் துணை ஆணையர் பணியிடம் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மத்திய / மாநில / Statuary / Autonomous நிறுவனங்களில் Pay Level -12 ல் ஊதியம் வாங்குபவர்கள், 5 ஆண்டுகள் 11- லெவல் ஊதியம் வாங்குபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
15,டிசம்பர், 2023-ன் படி, விண்ணப்பத்தாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி காலம்
இது மூன்றாண்டு கால பணியாகும். (தேவையெனில்)
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.78,800- ரூ. 2,09,200 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். இ-மெயில் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.12.2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Deputy Commissioner Admin,
Navodaya Vidyalaya Samiti,
B-15,Institutional Area, Sector-62,
Noida
Gautam Budh Nagar (U.P.) - 201309
இ-மெயில் முகவரி - applications.nvs@gmail.com
இந்த வேலைவாய்ப்பு குறித்து முழு விவரங்களுக்கு https://navodaya.gov.in/nvs/en/Recruitment/Notification-Vacancies/# - என்ற இணைப்பி க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.