(Source: ECI/ABP News/ABP Majha)
Chennai Jobs: சென்னை வருமானவரி அலுவலகத்தில் வேலை; ரூ.40,000 ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Income Tax Department Recruitment: வருமான வரி துறை அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
வருமான வரி துறை அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
Young Professional
பணியிடம்
சென்னை
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் சட்ட துறையில் முதுகலை பட்டம் (LLB)பெற்றிருக்க வேண்டும்.
பட்டய கணக்கர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். LLB படித்திருப்பவர்கள் 50% மதிப்பெண்
பெற்றிருக்க வேண்டும்.
பட்டய கணக்கர் தேர்ச்சி பெற்றவர்கள் n taxation and law graduates கீழ் பயிற்சி (article
ship) பெற்றவர்களாக இருந்தால் நல்லது.
Information and Communication Technology படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி காலம்:
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் ஓராண்டு கால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்ந்த்தப்படுவர். பணி திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படும்.
இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் வருமான வரி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர், நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://tnincometax.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
அதோடு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்பிக்க வேண்டும். இ-மெயில் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The Deputy Commissioner of Income-tax (Hqrs)(Admn),
Room No. 110, 1st Floor, O/o Pr. Chief Commissioner of Income-tax, TN&P
No. 121, M.G. Road, Nungambakkam,
Chennai – 600034
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - chennai.dcit.hq.admin@incometax.gov.in w
மின்னஞ்சல் தலைப்பில் t “APPLICATION FOR YP” என்று குறிப்பிட வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய https://www.tnincometax.gov.in/upload/important_news/important_news-4757232747607.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி -11-09-2023 மாலை 6 மணி வரை
*******
சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரத்தை காணலாம்.
பணி விவரம்
ஊர்க்காவல் படை வீரர்கள்
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- குற்றப் பின்னனி இல்லாதவர்களாகவும் நன்னடத்தை உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
- சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
- ரேஷன் கார்டு உடையவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு 45 நாட்கள்தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர், அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உதவுவதற்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.
ஊதிய விவரம்
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு சீருடை, தொப்பி மற்றும் காலணி ஆகியவை காவல் துறையால் வழங்கப்படும். இரவு ரோந்துப் பணி, பகல் ரோந்துப் பணி மற்றும் போக்குவரத்துப் பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.
பெண்களுக்கு பகல் ரோந்துப் பணி மட்டும் வழங்கப்படும். சிறப்பான முறையில் பணிபுரிவோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் மற்றும் குடியரசுத் தலைவர் பதக்கம் ஆகியவை தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி உள்ளவர்கள் சென்னைஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
சென்னைஊர்க்காவல் படை தலைமை அலுவலகம்,
சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்,
அண்ணா சாலை,
சைதாப்பேட்டை,
சென்னை-15
தொடர்பு - 044 2345 2441/ 2442)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 31.08.2023