Nilgiris Ekalvya school Recruitment: நீலகிரி ஏகல்வ்யா பள்ளியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!
Nilgiris Ekalvya school Recruitment: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.
தமிழ்நாடு பழங்குரியினர் நல உண்டி உறைவிட பள்ளி கல்விச் சங்கத்தின் கீழ் செயல்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏகல்வயா பள்ளியில் உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (18.08.2023) கடைசி.
நீலகிரியில் உள்ள உதகை மு.பாலாசா ஏகல்வயா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளில் Eklavya Model Residential Higher Secondary School ) முதுகலை பட்டதாரி ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தொகுபூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரம்:
பட்டாதாரி ஆசிரியர் பணியிடங்கள்
தமிழ் - 01
ஆங்கிலம் - 01
கணிதம் - 02
அறிவியல் - 02
சமூக அறிவியல் - 01
முதுகலை பட்டதாரி பணியிடங்கள்
வரலாறு -01
கணிதம் -01
புவியியல் - 01
உயிரியல் - 01
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி. எம்.ஏ. பி.எட். உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விதிமுறைகள் என்னென்ன ?
இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவதால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்.ரூ.15,000/- முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்.ரூ.18,000/- மற்றும் காப்பாளர்களுக்கு மாதம்.ரூ.12,000/- வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இந்நியமனங்கள் முற்றிலும் தற்காலிகமானது புதியதாக நியமிக்கப்படம் பணி என்பதால் இந்த கல்வியாண்டு 2023-2024 அல்லது பள்ளியின் கடைசி வேலை நாள் வரை மட்டுமே பணியில் தொடரமுடியும்.
TET தேர்ச்சி பெற்று கற்பிப்பதில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேற்படி காலிப்பணியிடங்களுக்கு பழங்குடியினர் இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியான பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் இல்லாதபட்சத்தில், பட்டியல் இனத்தவர்களும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் விண்ணப்பதாரர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறைகள்:
மேற்கண்ட தற்காலிக பணிகளுக்கு பள்ளி அலுவலகத்தில் நேரில் சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.08.2023 அன்று மாலை 5.00 வரை
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கூடுதல்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
பிங்கர் போஸ்ட்
உதகை - 643006
******
2023-2024 ஆம் ஆண்டிற்கு குமிழி ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கு தொகுப்பூதிய ஆசிரியர்கள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (17.08.2023) கடைசியாகும்.
ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி ( Eklavya Model Residential Higher Secondary School )
செங்கல்பட்டு ( Chengalpattu Jobs ) : செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுார் வட்டம் குமிழி ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளியில் ( Eklavya Model Residential Higher Secondary School ) கீழே குறிப்பிட்டுள்ள காலியாக உள்ள பட்டதாரி/ முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி காப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி விவரம்:
வேதியியல்
கணிதம்
ஆங்கிலம்
காப்பாளர்
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி. எம்.ஏ. பி.எட். உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விதிமுறைகள் என்னென்ன ?
- இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவதால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்.ரூ.15,000/- முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்.ரூ.18,000/- மற்றும் காப்பாளர்களுக்கு மாதம்.ரூ.12,000/- வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
- இந்நியமனங்கள் முற்றிலும் தற்காலிகமானது புதியதாக நியமிக்கப்படம் பணி என்பதால் இந்த கல்வியாண்டு 2023-2024 அல்லது பள்ளியின் கடைசி வேலை நாள் வரை மட்டுமே பணியில் தொடரமுடியும்.
- மேற்படி காலிப்பணியிடங்களுக்கு பழங்குடியினர் இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியான பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் இல்லாதபட்சத்தில், பட்டியல் இனத்தவர்களும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் விண்ணப்பதாரர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறைகள்:
மேற்கண்ட தற்காலிக பணிகளுக்கு பள்ளி அலுவலகத்தில் நேரில் சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.08.2023 அன்று மாலை 5.00 வரை
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Vaasan Nagar,
Melakottaiyur,
Tamil Nadu 600127
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1ERCR0NkogChgHoOMn99fOcmqbtSsBbJt/preview என்ற லிங்கை க்ளிக் செய்து காணவும்.