NIT Trichy Recruitment: டிகிரி தேர்ச்சி பெற்றவரா? திருச்சி என்.ஐ.டியில் வேலை - முழு விவரம்!
NIT Trichy Recruitment:தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நிர்வாகம் சார்ந்த பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Data Entry Operator Trainees (DEO - Ministerial)
Data Entry Operator Trainees (DEO - Technical)
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டெக்னிக்கல் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் இளங்கலை, பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு அரசு விதிகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://nittnt.samarth.edu.in/index.php/site/login - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும்.
முகவரி:
National Institute of Technology,
Tiruchirappalli – 620 015
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.04.2024
கூடுதல் விவரங்களுக்கு https://www.nitt.edu/home/other/jobs/Advt-DEO-Trainees-2024-v2.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் வாசிக்க..
NIFT Recruitment: டிப்ளமோ படித்தவரா? என்.ஐ.எஃப்.டி.-யில் வேலை- விவரம்!
CBSE Recruitment: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வேலை வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது? - முழு விவரம்