NIFT Recruitment: டிப்ளமோ படித்தவரா? என்.ஐ.எஃப்.டி.-யில் வேலை- விவரம்!
NIFT Recruitment: நேசனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரத்தை காணலாம்.
நேசனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேசன் டெக்னாலஜி (National Institute of Fashion Technology) பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி விவரம்:
மெசின் மெக்கானிக்
நிதி மேலாண்மை உதவியாளர்
உதவி காப்பாளர்
ஸ்டெனோகிராபந் கிரேட் III
ஜூனியர் அசிஸ்டண்ட்
நூலக உதவியாளர்
ஆய்வக உதவியாளர்
கல்வித் தகுதி:
மெசின் மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிக்க 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
ஆயவக உதவியாளர் பணிக்கு d ITI/ NSTI/ IDTR/ IGTR in Mechinist/ Instrument Mechanic/ Mechanic Industrial Electronics/ Mechanic Machine Tools Maintenance ஆகிய துறைகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
ஸ்டெனோகிராபர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணியிடங்களுக்கு லெவல் -4 நிலை மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், மகளிர், NIFT ஊழியர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பிகும் முறை:
https://www.nift.ac.in/kolkata/- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 09.04.2024