மேலும் அறிய

மதுரை தியாகராசர் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தியாகராசர் கல்லூரியில் பல்வேறு பணியிடங்களுக்காக இந்த அறிவிப்பில் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தியாகராசர் கல்லூரியில் ஆசிரியர் இல்லாத பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் நாளைக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரின் மிகவும் பழமையான கல்லூரிகளில் ஒன்றாகவும், காமராசர் பல்கலைக்கழகத்தில் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்பட்டுவருகிறது தியாகராசர் கல்லூரி. கருமுத்து தியாகராஜன் என்பவரால் கடந்த 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி மதுரை நகரின் கிழக்கில்  வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது  ஆசிரியர் இல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. எனவே என்னென்ன பணிகள், தகுதிகள் மற்றும் சம்பள விபரம் குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

மதுரை தியாகராசர் கல்லுரியில் காலியாக உள்ள பணியிடங்கள்:

இளநிலை உதவியாளர்

 தட்டச்சர்

ஆய்வுக்கூட உதவியாளர்

பதிவறை எழுத்தர்

நூலக உதவியாளர்

அலுவலக உதவியாளர்

பெருக்குபவர்

காவலர்

 குடிநீர் கொணர்பவர்

துப்புரவாளர்

 தோட்டக்காரர்

குறியீட்டாளர்

  • மதுரை தியாகராசர் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

வயது வரம்பு: மேற்கண்ட அனைத்துப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விதிகளின் படி குறிப்பிட்டப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், முதலில் www.tcarts.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து  அதனுடன் தேவையான கல்வி, பணி முன் அனுபவம் குறித்த அனைத்துச்  சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர்,

தியாகராசர் கல்லூரி,

139-140 காமராசர் சாலை, தெப்பக்குளம்

மதுரை -9.

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் நாளைக்குள் அதாவது அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : தியாகராசர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்காக இந்த அறிவிப்பில் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை www.tcarts.in என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

 

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்: ஈசியா வேலை பெற பொன்னான வாய்ப்பு!
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்: ஈசியா வேலை பெற பொன்னான வாய்ப்பு!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget