டெல்லி எய்ம்ஸில் வேலை: 192 பணியிடங்கள் அறிவிப்பு!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூனியர் ரெசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 192 ஜூனியர் ரெசிஸ்டென்ட் (junior Resistant) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள நபர்கள் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்தியாவில் தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமமாக அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS) செயல்பட்டுவருகிறது. புவனேஸ்வர், ஒரிசா, போபால், பாட்னா போன்ற பல இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டுவந்தாலும், டெல்லி தான் இந்தியாவின் முக்கியமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாக இயங்கிவருகிறது.
இந்த மருத்துவமனையின் கீழ் குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதால், அனைத்துத்தரப்பட்ட மக்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் உள்ளது. இதோடு எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும். அதன்படி, தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூனியர் ரெசிஸ்டன்ட் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எம்பிபிஎஸ் படித்து முடித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேறு என்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.
டெல்லி எய்ம்ஸில் ஜூனியர் ரெசிஸ்டென்ட் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 192
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் படித்து முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள நபர்கள், http://jr.aiimsexams.ac.in/StudentLogin.aspx என்ற இணையதளத்தின் மூலம் முதலில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்..
பின்னர் login id மற்றும் password என்ட்ரி செய்து உள்நுழைய வேண்டும்.
இதனையடுத்து இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் நிரப்ப வேண்டும்.
இதனையடுத்து விண்ணப்பத்தில் எந்த தவறும் இல்லாமல் நிரப்பிய பின்னர், தேவையான அனைத்து ஆவணங்களையும் இதில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியில் அனைத்து விபரங்களும் சரியாக உள்ளதா? என்பதை சரிப்பார்த்துக்கொண்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் எந்தவித விண்ணப்பக்கட்டணமும் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு முறை:
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூனியர் ரெசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் நபர்கள் மட்டுமே பணியில் நியமிக்கப்படுவார்கள்.
எனவே டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் ஜூனியர் ரெசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள், உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிப்பில் கூறப்படுகிறது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை அறிய வேண்டும் எனில், http://jr.aiimsexams.ac.in/pdf/NEW%20ONLINE%20ADVT%20FOR%20JANUARY%202022%20SESSION%20FOR%20JR%20NA.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.