IOCL Recruitment 2022: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? அப்ளை பண்ண நாளையே கடைசி நாள்..!
IOCL Recruitment 2022 : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு நிரப்பப்பட உள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,747 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி (03.01.2023) நாளாகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
தொழில்நுட்பம் சாராத மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பிரிவுகளில் (Technician, Graduate & Trade Apprentices (Technical and Non -Technical Apprentices) தொழில்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மொத்த இடங்கள்: 1,747.
இதன் மூலம் தேர்ந்தெடுப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கிளைகளில் பயிற்சி அளிக்கப்படும்.
பணியிடங்கள்:
தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், கோவா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மேற்கு வங்காளம், ஒடிசா, இராஜஸ்தான், உத்ரகாண்ட், ஆகிய மாநிலங்களில் உள்ள அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-வது அல்லது 12-வது வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், இரண்டாண்டு கால டிப்ளமோ படிப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் முடித்திருக்க வேண்டும்.
இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மெக்கானிக், ஃபிட்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக் உள்ளிட பணியிடங்கள் உள்ளன.இதில், தமிழ்நாட்டில் 24 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பயிற்சி காலம்:
இதற்கு ஓராண்டு 3 மூன்று மாதங்கள் பயிற்சி காலமாகும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு நடைபெறும் தேதி குறித்து பின்னர் வெளியிடப்படும்.
முக்கியமான நாட்கள்:
ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.01.2023, மாலை 5 மணி வரை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் விவரத்தினை https://iocl.com/admin/img/Apprenticeships/Files/cf909cc0920a437bbf5f01858a24749c.pdfஇந்த லிங்கை கிளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிக்க - https://iocl.com/