ஏதேனும் ஒரு டிகிரி இருக்கா? இந்திய வனத்துறையில் 45 காலிப்பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணிடுங்க!
வனத்துறையில் வன பாதுகாவலர் மற்றும் துணை வன பாதுகாவலர் பணிக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வனத்துறையில் காலியாக உள்ள வன பாதுகாவலர், துணை வன பாதுகாவலர் என 45 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதயும் உள்ளவர்கள் வருகின்ற மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்குட்பட்ட காட்டுப்பகுதிகளின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது இந்திய வனத்துறை. இத்துறையின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் நிறுவனத்தின் கீழ் காலியாக உள்ள வன பாதுகாவலர் மற்றும் துணை வன பாதுகாவலர் என 45 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் என்னென்னத் தகுதி கொண்டிருக்க வேண்டும்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
இந்திய வனத்துறையில் காலிப்பணியிட விபரங்கள்:
மொத்த காலிப்பணியிடங்கள் – 45
Conservator of Forest பணிக்கானக் காலிப்பணியிடங்கள் – 25
Deputy Conservator of forest பணிக்கான காலிப்பணியிடங்கள் – 20
கல்வித்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.
வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், https://icfre.gov.in அல்லது https://icfre.gov.in/vacancy/vacancy620.pdf என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, அதற்கு தேவையான அனைத்துச் சான்றிதழ்கள் நகல்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Secretary,
Indian Council of forest Research and Education,
P.O New Forest,
Dehradun- 248006
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி – 30.05.2022
விண்ணப்பக்கட்டணம்: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வனத்துறையில் வன பாதுகாவலர் மற்றும் துணை வன பாதுகாவலர் பணிக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, http://icfre.gov.in/vacancy/vacancy620.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.