ICF Chennai Recruitment: ICF-இல் தொழில் பழகுநர் பயிற்சி வாய்ப்பு;யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?விவரம்!
ICF Chennai Recruitment: சென்னை இரயில் பெட்டி தொழிற்சாலையில் 10-ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
சென்னையிலுள்ள இரயில் பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory, Chennai) 10-ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்குட்பட்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ.டி.ஐ படித்தவர்களும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களூம் இம்மாதம் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியிட விவரங்கள்:
- கார்பென்டர் (Carpenter)
- எலக்ட்ரிசியன் (Electrician)
- ஃபிட்டர் (Fitter)
- மெக்கானிஸ்ட் (Machinist)
- பெயிண்ட்டர் (Painter)
- வெல்டர் (Welder)
- ஆய்வக உதவியாளர் (MLT-Radiology)
- ஆய்வக உதவியாளர் (MLT-Pathology)
- Programming and System Administration Assistant -PASAA
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1,010
கல்வித் தகுதி:
- இதற்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும்.
- 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். ஐ.டி.ஐ. முடித்தவர்களாக இருந்தால் ஓராண்டு கால பயிற்சி வழங்கப்படும்.
- ஆய்வக உதவியாளர் பணிக்கு ஓராண்டு மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி ஊக்கத்தொகை
- Freshers – (10-வது தேர்ச்சி பெற்றவர்கள்) ரூ. 6000/-
- Freshers – (12-வது தேர்ச்சி பெற்றவர்கள்) ரூ. 7000/-
- 3. Ex-ITI – ரூ. 7000/-
வயதுத் தகுதி :
- ஐ.டி.ஐ,. தேர்ச்சி பெற்றவராக இருந்தால் 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- ஐ.டி.ஐ. தேர்ச்சி பெறாதவர்கள் எனில் 22 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் முன்னாள் பொதுத்துறை ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அரசு விதிகளின் படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
பயிற்சி இடங்களுக்கு ஏற்ப 10 ஆம் வகுப்பு, மற்றும் ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pb.icf.gov.in/index.php- என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தொடர்பு எண் - 044-26147748
இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு சந்தேகங்களுக்கு அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். (வார நாட்களில் 9:30 AM - 17:30 PM) (சனிக்கிழமை - 9:30 AM - 12.25 PM )
விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.06.2024 மாலை 5:30 மணிக்குள்
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://pb.icf.gov.in/act/notification.pdf - என்ற லிங்க்கை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..
UPSC முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்யும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
Naan Mudhalvan: போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி;நாளை முதல் விண்ணப்பிக்கலாம் -முழு விவரம்