மேலும் அறிய

தமிழ் குறித்து எங்களுக்கே பாடமா?- ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் இந்தி ஏன்? அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!

தவறுதலாக இணையத்தில்‌ பதிவேற்றம்‌ செய்த இணை இயக்குநர்‌ உடனடியாக பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டு, அவர்‌ மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்‌ குறித்து எங்களுக்கு எவரும்‌ பாடம்‌ எடுத்து கூச்சல்‌ போட வேண்டியதில்லை. ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் இந்தி இடம்பெற்றது ஓர் அரசு அலுவலரின் தவறு மட்டுமே என்று சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை அமைச்சர்‌ கீதா ஜீவன்‌‌ விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌, சமூக நல ஆணையரகம்‌ மூலம்‌ பாதிப்புக்கு உள்ளாகும்‌ மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம்‌, "மகளிர்‌ உதவி எண்‌.181" சென்னையில்‌ செயல்பட்டு வருகிறது.

தவறுதலாக இந்தி மொழி சேர்ப்பு

மகளிர்‌ உதவி எண்‌.181 பணியிடத்தில்‌ எற்பட்டுள்ள காலிப்‌ பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும்‌ பொருட்டு, விண்ணப்பங்கள்‌ பெற்றிட http://tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டது. அதில்‌ "அழைப்பு ஏற்பாளர்‌" (Call Responders) என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதிகள்‌ என தமிழ்‌, ஆங்கிலம்‌ மற்றும்‌ இந்தி என தவறுதலாக பதிவேற்றம்‌ செய்யப்பட்டது.

இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின்‌ கவனத்திற்கு வந்தவுடன்‌, அவ்விளம்பரம்‌ உடனடியாக இணையதளத்தில்‌ இருந்து நீக்கப்பட்டு, தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌ தெரிந்த நபர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌ என்று திருத்தப்பட்ட ஆட்‌சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம்‌ செய்யப்பட்டது.

இணை இயக்குநர் சஸ்பெண்ட்

மேலும்‌, தவறுதலாக இணையத்தில்‌ பதிவேற்றம்‌ செய்த இணை இயக்குநர்‌ உடனடியாக பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டு, அவர்‌ மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாய்மொழியாம்‌ தமிழ்‌ மொழியினை உயிருக்கும்‌ மேலாய்‌ மதிக்கும்‌ திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ தலைவர்‌ எங்கள்‌ முதலமைச்சர்‌ தலைமையில்‌, அனைத்து அரசுத்‌ துறைகளிலும்‌ தமிழ்‌ மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம்‌, ஒன்றிய அரசுடனான கடிதப்‌ போக்குவரத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கிலம்‌ பயன்படுத்தப்படுகிறது.

திமுக வரலாறு

தமிழ்த்தாய்‌ வாழ்த்து, அய்யன்‌ திருவள்ளுவருக்கு வள்ளுவர்‌ கோட்டமும்‌, 133 அடியில்‌ வானுயர சிலையும்‌ அமைத்தது, உலகத்‌ தமிழ்‌ மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத்‌ தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள்‌ கொண்டதுதான்‌ திராவிட முன்னேற்றக்‌ கழக வரலாறு.

தமிழர்‌ பெருமை கூறும்‌ கீழடி அருங்காட்சியகம்‌ அமைத்து, உலகத்தின்‌ பார்வையை நம்‌ மீது திருப்பியது அண்மைக்‌ கால வரலாறு. மேலும்‌, அரசுப் பணிகளில்‌ தமிழ்‌ மொழியில்‌ பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு, நமது திராவிட மாடல்‌ அரசு.

சாதனைகளை பட்டியலிட்டுக்‌ கொண்டே போகலாம்‌

தமிழ்நாடு அரசுத்‌ துறைகளில்‌ உள்ள பணியிடங்கள்‌ மற்றும்‌ மாநில பொதுத்துறை நிறுவனங்களில்‌ உள்ள பணியிடங்கள்‌ அனைத்திலும்‌ தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம்‌ நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு, தேர்வு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ அனைத்து போட்டித்‌ தேர்வுகளிலும்‌ தமிழ்‌ மொழி பாடத்தாள்‌ தகுதித்‌ தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின்‌ பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக்‌ கொண்டே போகலாம்‌. ஒரு அரசு அலுவலர்‌ செய்த தவறை வைத்துக்‌ கொண்டு அரசியல்‌ செய்யும்‌ நிலையில்‌ சிலர்‌ உள்ளதைப்‌ பார்த்தால்‌ பரிதாபமாக உள்ளது.

தமிழ்‌ குறித்து எங்களுக்கு எவரும்‌ பாடம்‌ எடுக்கவேண்டாம்

தமிழ்‌ குறித்து எங்களுக்கு எவரும்‌ பாடம்‌ எடுத்து கூச்சல்‌ போட வேண்டியதில்லை. இதனால்‌ மக்கள்‌ ஏமாறப்‌ போவதில்லை.

முதலமைச்சர்‌ ஆட்சியில்‌, தமிழ்‌ மொழி மென்மேலும்‌ சிறப்புகள்‌ பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக்‌ காண சகிக்காதவர்கள்தான்‌ இப்போது கூக்குரல்‌ இடுகிறார்கள். அதனை புறம்‌ தள்ளி, எங்கள்‌ தாய்மொழியாம்‌ தமிழ்‌ வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்‌’’.

இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
Embed widget