Jobs : ஆயிரங்களை கொட்டும் மத்திய அரசு வேலை.. பட்டதாரிகள் உடனே யூஸ் பண்ணிக்கோங்க!
தொழில்முனைவோர் துறையில் முதுகலை பட்டப்படிப்புகள் மட்டுமில்லாது ஒரு பெல்லோஷிப் திட்டம் மற்றும் பல தொழில் முனைவோர் பயிற்சி திட்டங்களை இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வழங்கிவருகிறது.
இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Project coordinator, Business analyst ஆகிய பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் மார்ச் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்(The Entrepreneurship Development Institute of India) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனம் ஆகும். கடந்த 1983 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தொழில்முனைவோர் துறையில் முதுகலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது. இதோடு ஒரு பெல்லோஷிப் திட்டம் மற்றும் பல தொழில் முனைவோர் பயிற்சி திட்டங்களை வழங்கும் அமைப்பாகவும் இது செயல்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Project coordinator, Business analyst பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துகொள்வோம்.
இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனப் பணிக்கானத் தகுதிகள்:
கல்வித்தகுதி:
Project Coordinator:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்குத் தொடர்புடைய Rural Management / Social work பாடப்பிரிவில் Masters Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதோடு இப்பணிக்கு தொடர்புடைய Micro Enterprise / Entrepreneurship Development / Self Employment / Livelihood / Womens related schemes & projects குறைந்தது 3 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
Business Analyst
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Civil / Electronics பாடப்பிரிவில் CA / ICWA / BE / B.Tech / MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கீழ் project financial appraisals / DPR preparation போன்ற பிரிவில் 4 ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் ஆர்வமுள்ள நபர்கள், https://www.ediindia.org/the-institute/jobs-at-edii/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- மார்ச் 4, 2022
விண்ணப்பங்களை jobs.staff@ediindia.org என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.
விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் – மாதம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 55 ஆயிரம் என நிர்ணயம்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.ediindia.org/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துகொள்ளலாம்