மேலும் அறிய

CISF Recruitment 2022: மத்திய அரசில் வேலை; 787 பணியிடங்கள்..! விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்? முழு விவரம்..!

CISF Recruitment 2022 : மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 787  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 787  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கான்ஸ்டபிள் (constable), டிரேஸ்மென்  (Tradesmen) பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளதாகவும், மேலும் இது தற்காலிக பணி மட்டுமே என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய தொழ்ற்பாதுகாப்பு படை (Central Industrial Security Force) :

இந்தியாவின் முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் உதவி சப் – இன்ஸ்பெக்டர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு பணியிடங்களுக்கு நிகரான தொழிற்கல்வி முடித்திருந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்ன தகுதி தேவை? என அறிந்துக்கொள்ளலாம்.  Barber, Boot Maker/Cobbler, Tailor, சமையல் செய்பவர், Mason, Mali, Painter, Plumber, Washer Man மற்றும் வெல்டர் ஆகிய பணியிடங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள்/ பணிக்கானத் தகுதிகள்:

CISF Recruitment 2022: மத்திய அரசில் வேலை; 787 பணியிடங்கள்..! விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்? முழு விவரம்..!

பணி விவரம்:

கான்ஸ்டபிள்

டிரேட்மென்

பணி இட விவரம்:

தமிழ்நாடு, ஹரியானா, புது டெல்லி, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், பீகார், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், மணிப்பூர், திரிபுரா போன்ற நாடு முழுவதும் மண்டலம் வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CISF Recruitment 2022: மத்திய அரசில் வேலை; 787 பணியிடங்கள்..! விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்? முழு விவரம்..!

CISF Recruitment 2022: மத்திய அரசில் வேலை; 787 பணியிடங்கள்..! விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்? முழு விவரம்..!

கல்வித் தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது பணியிடத்திற்கு தேவையான தொழிற்கல்வி படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் புகைப்படம் மூலம் தெரிந்து கொள்ளவும்.
 
CISF Recruitment 2022: மத்திய அரசில் வேலை; 787 பணியிடங்கள்..! விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்? முழு விவரம்..!
 
ஊதிய விவரம்:

 5-வது லெவல் ஊதிய வரைவின் ( Pay Level-3 ) படி  ரூ. 21,700 முதல் 69,100 வரை  வரை ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ’allowances’ வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், திறனறிவுத் தேர்வு நடத்தபடும். மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.  எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உடல்தகுதித் தேர்வு (physical efficiency test):

CISF Recruitment 2022: மத்திய அரசில் வேலை; 787 பணியிடங்கள்..! விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்? முழு விவரம்..!

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் பொது அறிவு, ஆப்டிடியூட் கணிதம் உள்ளிட்டவைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். வினா தாள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CISF Recruitment 2022: மத்திய அரசில் வேலை; 787 பணியிடங்கள்..! விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்? முழு விவரம்..!

டிரேட் டெஸ்ட்:

CISF Recruitment 2022: மத்திய அரசில் வேலை; 787 பணியிடங்கள்..! விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்? முழு விவரம்..!

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே ரூ.100 -ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். மகளிர், முன்னாள் இராணுவ வீரர்கள், பழங்குடியின/பட்டியலின பிரிவினர் EWS-Economically Backward Class தகுதியுடையோர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? 

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான  http://www.cisfrectt.in  என்ற லிங்கை கிளிக் செய்து தேவையான கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட  ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இந்தப் பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் கட்டணம்- கவனிக்க:

CISF Recruitment 2022: மத்திய அரசில் வேலை; 787 பணியிடங்கள்..! விண்ணப்பிக்க என்ன தகுதி வேண்டும்? முழு விவரம்..!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2022 (23.00 மணி வரை)

இது தொடர்பாக கூடுதல் விவரங்கள், விண்ணப்ப படிவம் ஆகியவற்றை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு file:///C:/Users/jansi/Downloads/CISF%20Constable%20Tradesman%20(CT)%20Notification%202022%20Apply%20Online%20787%20Post.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Embed widget