மேலும் அறிய

பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்? இந்திய உளவுத்துறை பணியகத்தில் 150 காலிப்பணியிடங்கள்!

இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் 2022 ஆம் ஆண்டில் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உளவுத்துறை பணியகத்தில் காலியாக உள்ள  கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் பிரிவில் உதவி புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற மே 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது உளவுத்துறை பிரிவு (Intelligence). இங்கு பல்வேறு துறைகளின் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது உதவி புலனாய்வு அலுவலர் ( தொழில்நுட்பம்) -Assistant Central Intelligence office என 150 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து அறிந்து கொள்வோம்.

  • பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்? இந்திய உளவுத்துறை பணியகத்தில் 150 காலிப்பணியிடங்கள்!

உதவி புலனாய்வு அலுவலர் (தொழில்நுட்பம்)  ( Assistant Central Intelligence officer) பணியிடங்களுக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 150

கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் - 56

மிண்ணனு மற்றும் தகவல் தொடர்பியல் – 94

கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.E or B.Tech in Electronics/ Electronics and Telecommunication/ Electronics and communication/ Electrical and Electronics / Information Technology / Computer science/ Computer Engineering (or) Master’s Degree in Electronics/ Physics/ Computer applications ஆகிய பிரிவுகளில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

SC/ ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் என  வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், https://mharecruitment.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – மே 7, 2022

தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் 2022 ஆம் ஆண்டில் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் இவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்? இந்திய உளவுத்துறை பணியகத்தில் 150 காலிப்பணியிடங்கள்!

சம்பள விபரம்:

மேற்கண்ட முறைகளில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ. 44,900 – 1,42,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள பொறியியல் பட்டதாரிகள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.mha.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget