மேலும் அறிய
Advertisement
Railway Recruitment| ரயில்வே பணியாளர் தேர்வு குறித்து விண்ணப்பதாரர் கருத்து கேட்பு முகாம் ! முழு விவரம்..
தேர்வு குறித்த தங்கள் சந்தேகங்களை பிப்ரவரி 16 வரை அலுவலக நாட்களில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அலுவலகங்களில் உள்ள முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரிகளை சந்தித்தும் விளக்கம் பெறலாம்.
”சமீபத்தில் ரயில்வே உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து சில குறைபாடுகளை விண்ணப்பதாரர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதுபற்றி விசாரிக்க உயர்மட்ட குழு ஒன்றை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது. சமீபத்திய தேர்வு முடிவுகள், விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய கையாளப்பட்ட முறை, இரண்டாம் கட்ட தேர்வு ஆகியவை குறித்து இந்த குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
இது சம்பந்தமாக ரயில்வே உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் கருத்துகளை அறிவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்வு சம்பந்தமான கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை ரயில்வே தேர்வாணைய இணையதளத்தில் உள்ள www.iroams.com/outreach இணைய முகவரியில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 16 வரை விண்ணப்பதாரர்கள் பதிவிடலாம். மேலும் உதவிச் செயலாளர், ரயில்வே பணியாளர் தேர்வாணையம், எண் 5, டாக்டர் பி. வி. செரியன் கிரசன்ட் சாலை, எத்திராஜ் கல்லூரி பின்புறம், எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.
Railway Recruitment | 35 ஆயிரம் காலியிடங்களுக்கு 1.25 கோடி தேர்வர்கள்: பிஹார் கலவரமும் காரணங்களும்!
— Arunchinna (@iamarunchinna) January 28, 2022
- https://t.co/0LwNWjMCiR #abpnadu | #Railway | #RailwaysProtest | #RailwayExam | @Rameshtamil10 | @ReeganJNR | @RevathiM92 | @syednizamdeen | @MaduraiMedical | @HajiAJKMydheen
விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு குறித்த தங்கள் சந்தேகங்களை பிப்ரவரி 16 வரை அலுவலக நாட்களில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அலுவலகங்களில் உள்ள முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரிகளை சந்தித்தும் விளக்கம் பெறலாம். நேரடி விளக்கம் பெற வரும்போது விண்ணப்பதாரர் தனது தேர்வு அழைப்பு கடிதத்தையும் மற்றும் இரு முறை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழையும் கொண்டு வரவேண்டும்.” - என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதை படிக்க மிஸ்பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion