பத்தாம் வகுப்பு பாஸா? மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் உதவியாளர் பணி இருக்கு! விவரம்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வௌியாகியுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
மதுரையில் கடந்த 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம். தென் தமிழகத்தில் 18 பாடசாலைகளையும், 72 திணைக்களங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்தப் பல்கலைக்கழகமானது 109 இணைக்கப்பட்ட கல்லூரிகள் உள்பட 7 மாலைநேரக்கல்லூரிகளைக் கொண்டு இயங்கிவருகிறது. இங்கு கிராமப்புற மாணவர்கள் முதல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதோடு பல்வேறு துறைகளில் தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் என பலர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) மற்றும் ஆய்வக உதவியாளர் பணிகள் நிரப்பப்படவுள்ள நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேறு என்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணிக்கானத் தகுதிகள்:
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)
காலிப்பணியிடங்கள் – 3
கல்வித்தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc (வாழ்க்கை அறிவியல், உயிரி தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், தாவர அறிவியல், வேளாண்மை, மரபியல் அறிவியல் ஆகியவற்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் GC-MS/MS, FACS, PCR, போன்றவற்றை கையாள தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் – ரூபாய் 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Lab attendant பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடம் – 1
கல்வித்தகுதி – விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் .
சம்பளம் – மாதம் ரூ. 7ஆயிரம் என நிர்ணயம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், விண்ணப்பத்தாரரின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் வழியாக வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
Prof. S. Chandrasekaran,
Chairperson,
Scholl of Biological Sciences,
Madurai Kamaraj University,
Madurai – 625021
மின்னஞ்சல் முகவரி – sbsoffice@mkuniversity.ac.in
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். இதில் தேர்வாகும் நபர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://mkuniversity.ac.in/ அல்லது https://mkuniversity.ac.in/new/career என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பைப் பார்த்து முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்.