மேலும் அறிய

8ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

சென்னை அண்ணா பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்

அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப வணிகமாக்கல் நிர்வாகி, திட்ட உதவியாளர், திட்ட இணை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பணிக்கும் வெவ்வெறு கல்வித்தகுதிகள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். எனவே என்னென்ன தகுதிகள் தேவை? என்பதை இங்கே விரிவாகத்தெரிந்துக்கொள்வோம்.

  • 8ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

தொழில்நுட்ப வணிகமயமாக்கல் நிர்வாகி (Technology Commercialization Executive)

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 தொழில்நுட்ப வணிகமயமாக்கல் நிர்வாகி காலியாக உள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் : B.E / B.Tech  படிப்புடன் MBA படித்திருக்க வேண்டும் எனவும்  8 ஆண்டு பணி அனுபவம் அவசியம் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வாகும் இவர்களுக்கு மாதம் ரூபாய் 50 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திட்ட இணை உதவியாளர் (Project Associate)

B.E / B.Tech / MBA / MCA / M.Sc முடித்தவர்களாக இருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தின் திட்ட இணை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதோடு விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திட்ட உதவியாளர் (Project Assistant)

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் B.E / B.Tech / MCA / M.Com / M.Sc படித்திருப்பதோடு வேண்டும். 2 ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூபாய் 20 ஆயிரம் சம்பளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர் – ஓட்டுனர் (Office Assistant cum driver)

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இதோடு கூடுதலாக, 2 ஆண்டு பணி அனுபவமும் வேண்டும்.இவர்களுக்கு சம்பளம் ரூபாய் 16 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 8ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

எனவே மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் விரும்பும் நபர்கள் https://www.annauniv.edu/pdf/tec%20recruitment%202021.pdf என்ற இணைய தளப்பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட அவுட் எடுத்து,  DIRECTOR, CENTRE FOR TECHNOLOGY DEVELOPMENT AND TRANSFER ANNA UNIVERSITY, CHENNAI – 600 025 என்ற முகவரிக்கு வருகின்ற செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை இளைஞர்களுக்கு PM Internship: மாதம் ரூ.9000, அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாடு!
மதுரை இளைஞர்களுக்கு PM Internship: மாதம் ரூ.9000, அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாடு!
B.E, B.Sc, B.Com படித்தவரா? தாட்கோ வழங்கும் இலவச சான்றிதழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு! முழு விபரம்..
B.E, B.Sc, B.Com படித்தவரா? தாட்கோ வழங்கும் இலவச சான்றிதழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு! முழு விபரம்..
நண்பாஸ்... அட்டகாசமான வேலை வாய்ப்பு உங்களுக்காகவே வந்துள்ளது: முழு விபரம் உள்ளே!!!
நண்பாஸ்... அட்டகாசமான வேலை வாய்ப்பு உங்களுக்காகவே வந்துள்ளது: முழு விபரம் உள்ளே!!!

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
Embed widget