Low Sperm Count : இந்திய ஆண்களுக்கு விந்தணு குறைபாடுகள் இருப்பின், அதற்கான காரணங்கள் என்ன? சிகிச்சை என்ன?
பொதுவாக ஆண்களில் விந்தணு குறைபாடு ஒரு பெரும் பிரச்னையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு பிந்தைய காலம் தொட்டே ஆண்களில் விந்தனு குறைபாடு குறித்த அதிக தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. கொரோனா அத்தகைய பாதிப்பை ஏற்படுத்துமா என்பது ஆராய்ச்சி நிலையில் ஒருபக்கம் என்றாலும், பொதுவாக ஆண்களில் விந்தணு குறைபாடு ஒரு பெரும் பிரச்னையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்னை தற்போது இந்தியாவிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த குறைந்த விந்தணு எண்ணிக்கை, அல்லது ஒலிகோஸ்பெர்மியா, பெரும்பாலும் உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பதன் காரணமாக ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஒலிகோஸ்பெர்மியா கருவுறாமை மற்றும் கருத்தரிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது, அத்துடன் உளவியல் ரீதியான துன்பத்தை ஏற்படுத்துகிறது. இதுதவிர ஒருவரின் சமூகம் சார்ந்த வாழ்க்கைத் தரத்தை பல அடுக்குகளில் பாதிக்கிறது எனலாம். இதனை எதிர்கொள்ள, இது எதனால் ஏற்படுகிறது? இதற்கான காரணங்கள் என்ன என்பதை புரிந்துகொள்வது அவசியம்.
காரணங்கள்:
புகைபிடித்தல், மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை உட்கொள்வது, முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் ஆகியவை குறைந்த விந்தணு எண்ணிக்கையுடன் தொடர்புடைய சில லைஃப்ஸ்டைல் சார்ந்த காரணங்களாகும். சிகரெட் பிடிக்காத ஆண்களை விட சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் அனபோலிக் ஸ்டெராய்டுகள் மற்றும் கோகோயின் போன்ற பொருட்களின் பயன்பாடும் இந்த நிலைக்கு வழிவகுக்கும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சில வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டால் இந்த ஒலிகோஸ்பெர்மியாவைத் தடுக்கவும் அதற்கு சிகிச்சையளிக்கவும் முடியும். இதற்கு ஒருவர் மது அருந்துவதைக் கட்டுப்படுத்தவும், புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் உட்கொள்வதை நிறுத்துவதும் அவசியம். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு மாறவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், சூட்டை அதிகரிக்கும் இடங்களில் ஸ்க்ரோட்டம் என்னும் விதைப்பை வெளிப்படுத்துவதையும் தடுக்க வேண்டியது அவசியம்.
குறைவான விந்தணு எண்ணிக்கைக்கான பிற சிகிச்சை தனிநபரின் தேர்வின் அடிப்படையில் வேறுபடும் எனலாம். சிலருக்கு அறுவைசிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை தேவைப்படலாம், மற்றவர்கள் ஒரு சுற்று மருந்துகளுடன் இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க முடியும். ஒரு டாக்டரைக் கலந்தாலோசித்து அதற்கான சிறந்த சிகிச்சையைத் தீர்மானிப்பது அவசியம்.
முன்னதாக,
நமது வயது அதிகரிப்பதற்கு ஏற்ப நமது உடலும் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது, உங்கள் உடலுடன், உங்கள் உடலுறவுத் திறனும் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. செக்ஸுக்கான குறைந்த லிபிடோ மற்றும் விரைப்புத்தன்மை இந்த காலக்கட்டத்தில்தான் அதிகமாக இருக்கும். பெண்களில், கவனிக்கப்படும் முக்கிய மாற்றங்களில் ஒன்று பிறப்புறுப்பு வறட்சி ஆகும். இது உங்கள் செக்ஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வாழ்நாள் முழுவதும் புத்துணர்வுடன் கூடிய செக்ஸ் வாழ்க்கையைப் பெறலாம்.
உடற்பயிற்சியும் சரியான வகை உணவும் தொடர்ந்து உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். உங்கள் தினசரி உணவுத் திட்டத்தில் சில பானங்களைச் சேர்ப்பதன் மூலம் உங்களால் நீண்டகாலத்துக்கு உங்களது செக்ஸ் வாழ்க்கையை நீட்டிக்க முடியும். இந்த உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ளுதல் உங்கள் ரொமாண்டிக் வாழ்க்கையை நீண்ட காலம் நீடிக்கும், உங்கள் பாலுணர்வையும் அதிகரிக்கும். அந்தப் பானங்களின் பட்டியல் கீழே...
சில ஆய்வுகளின்படி, கற்றாழை சாறு, முதன்மை ஆண் பாலின ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கற்றாழை சாறு குடிப்பதால் பாலியல் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் அதிக லிபிடோவும் உண்டாகும். கற்றாழை சாறு பொதுவாக உங்கள் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
ஒரு ஆய்வின் படி, மாதுளை சாறு விறைப்புத்தன்மையை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் இது அண்டி ஆக்சிடெண்ட்களின் அதிக செறிவுகளைக் கொண்டுள்ளதால் மாதுளைச் சாறு இதய நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
திருமண இரவில் புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு கிளாஸ் பால் ஏன் கொடுக்கப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏனெனில் பால் ஆரோக்கியமான உடலுறவுக்கு உதவுகிறது. இது ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது மற்றும் உடனடி ஆற்றலை வழங்குகிறது. உங்கள் ரொமாண்டிக் வாழ்க்கை மேம்பட ஒரு கிளாஸ் பாலை குடிப்பது பலவகையில் உதவும். அதே சமயம் உங்களுக்கு லாக்டோஸ் டாலரன்ஸ் உள்ளதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )