Monkeypox Virus: ஓரினச்சேர்க்கையாளர்களை குறிவைத்து தாக்கும் குரங்கு காய்ச்சல்! வெளியான அதிர்ச்சி தகவல்!
காங்கோ வைரஸ் திரிபில் 10% வரை இறப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க திரிபில் 1% வரை இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது
2021ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சில பாதிப்பை ஏற்படுத்திய குரங்கு காய்ச்சல், தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு நபருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் கனடாவுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குரங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸானது டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்துடன் தொடர்புடையது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் உறுதிப்படுத்தப்பட்ட வழக்காக பதிவாகியிருக்கும் இந்த பாதிப்புக்கு உட்பட்டவர் ஏப்ரல் இறுதியில் கனடாவுக்குச் சென்று மே மாத தொடக்கத்தில் திரும்பினார் என்று தெரியவந்துள்ளது. அந்த நபர், கனடாவில் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
காங்கோவில் கண்டறியப்பட்ட குரங்கு காய்ச்சல்
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், 1996 முதல் 1997 வரை குரங்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, குரங்கு காய்ச்சல் பாதிப்பு வழக்கு அமெரிக்காவில் முதன்முறையாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த நோய் பரவும் சாத்தியக்கூறுகளை கவனத்தில் கொண்டு, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகிறது.
இது லேசான காய்ச்சலாக அறியப்பட்டாலும் இரண்டு வகை திரிபுகளை கொண்டதாக குரங்கு காய்ச்சல் அறியப்படுகிறது. ஒன்று காங்கோ திரிபு மற்றொன்று மேற்கு ஆப்பிரிக்க திரிபு. இதில் காங்கோ வைரஸ் திரிபில் 10% வரை இறப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க திரிபில் 1% வரை இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. லண்டனில் மேற்கு ஆப்பிரிக்க திரிபை கொண்ட குரங்கு காய்ச்சல் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது. இது மிகவும் அசாதாரணமானது என்று கூறும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் சர்வதேச பொது சுகாதார பேராசிரியர் ஜிம்மி விட்வொர்த், இந்த ஆண்டிற்கு முன்னர் எட்டு முறை இது பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் பாதிப்பு
போர்ச்சுக்கல்லில் முன்னதாக 5 பேருக்கு தொற்று பதிவாகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் 9 பேருக்கு தொற்று பதிவான நிலையில், ஓரினச்சேர்க்கையாளர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உறவு கொண்ட ஓரினச்சேரிக்கையாளர்கள் அசாதாரணமான தடிப்புகள் அல்லது புண்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என UKHSA தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பரவுமா?
குரங்கு காய்ச்சல் வைரஸ் குறித்து இந்தியாவில் இதுவரை எந்த வழக்கும் பதிவாகவில்லை. இருப்பினும் நோய்பரவால் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கிவிட்டது. இந்தியாவில் புதிதாக தொற்று பதிவாகும் பட்சத்தில் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )