மேலும் அறிய

Monkeypox Virus: இங்கிலாந்தில் ஒருவருக்கு MonkeyPox தொற்று… மனித குலத்திற்கு புதிய ஆபத்தா? அதென்ன குரங்கு காய்ச்சல்?

குரங்கு காய்ச்சல் பாதிப்பு காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி மற்றும் சோர்வுடன் ஆரம்பிக்கிறது. நிணநீர் கணுக்களை வீங்கச் செய்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர்,  நைஜீரியா நாட்டிற்கு சென்று வந்த நிலையில், அவருக்கு குரங்கு காய்ச்சல் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மை என்பது பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் ஆகும். சமீபத்தில் நைஜீரியா சென்று வந்தவருக்கு இந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரிட்டன் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். பாதிக்கப்பட்டவருக்கு செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து சிறப்பு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய சுகாதார ஆலோசனைகளை வழங்க உள்ளனர். குறிப்பாக, பாதிக்கப்பட்ட நபர் பிரிட்டனுக்கு விமானத்தில் வந்தபோது, அவரது அருகில் அமர்ந்து பயணித்தவர்ளைத் தொடர்புகொள்ள உள்ளனர்.

குரங்கு காய்ச்சல் என்றால் என்ன?

குரங்கு காய்ச்சல் என்பது ஒரு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் ஆகும். அதாவது பெரியம்மை நோயை ஏற்படுத்தும் வேரியோலா வைரஸையும், பெரியம்மை தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் வேசினியா வைரஸையும் உள்ளடக்கில் வைரஸ் வகையாகும். குரங்கு நோய் பெரியம்மை நோயின் அறிகுறிகளையே ஏற்படுத்து. ஆனால், ஒப்பீட்டளவில் தீவிரம் குறைவாக இருக்கும். 1980-களில் தடுப்பூசி மூலம் பெரியம்மை நோய் பரவலை தடுத்தாலும், குரங்கு காய்ச்சல் தொடர்ந்து மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் பரவி வருகிறது.

குரங்கு அம்மை என்பது பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய். இதுவரை அணில், எலிகள், டார்மிஸ் மற்றும் சில குரங்கு வகைகளில், இந்த குரங்கு காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

Monkeypox Virus: இங்கிலாந்தில் ஒருவருக்கு MonkeyPox தொற்று… மனித குலத்திற்கு புதிய ஆபத்தா? அதென்ன குரங்கு காய்ச்சல்?

பரவல்தன்மை

அதே சமயம், இந்த நோய் மனிதனுக்கு மனிதனுக்கு அவ்வளவு எளிதில் பரவாது என்று கூறப்படுகிறது. ஏனெனில், அதன் பரிமாற்றம் ஆறு தலைமுறை இடைவெளி கொண்ட நீண்ட சங்கிலி ஆகும். UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் (UKHSA) மருத்துவ மற்றும் வளர்ந்து வரும் நோய்த்தொற்றுகளின் இயக்குனர் டாக்டர் கொலின் பிரவுன் கூறுகையில், “குரங்கு காய்ச்சல் மக்களிடையே எளிதில் பரவாது என்பதையும், பொது மக்களுக்கு ஒட்டுமொத்த ஆபத்து மிகக் குறைவு என்பதையும் வலியுறுத்துவது முக்கியம்", என்றார். அப்படி பரவுகிறது என்றால், உடல் திரவங்கள் வாயிலாகவும், தோலில் ஏற்படும் புண்கள் வாயிலாகவும் அல்லது வாய், தொண்டை, சுவாசத் துளிகளாலும், அசுத்தமான பொருள்கள் போன்ற உள் சளிப் பரப்புகளின் மூலம் பரவலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

அறிகுறிகள்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) கூற்றுப்படி, குரங்கு அம்மை பாதிப்பு காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி மற்றும் சோர்வுடன் ஆரம்பிக்கிறது. நிணநீர் கணுக்களை வீங்கச் செய்கிறது. இந்த பாதிப்பு, பெரியம்மை நோயில் ஏற்படாது. குறிப்பாக சிக்கன் பாக்ஸ், தட்டம்மை, பாக்டீரியா தோல் தொற்றுகள், சிரங்கு, சிபிலிஸ், மருந்து சம்பந்தப்பட்ட ஒவ்வாமைகளுடன் குரங்கு காய்ச்சலை குழப்பாமல் இருப்பது முக்கியம் என்று WHO சுட்டிக்காட்டுகிறது. குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டு அதன் அறிகுறிகள் குறைந்தது 7 முதல் 14 நாள்களுக்குள் தெரிந்துவிடும். சில சமயங்களில் 5-21 நாட்கள் வரை இருக்கலாம்.

பொதுவாக காய்ச்சல் ஏற்பட்டு 3 நாள்களுக்குள் முகத்தில் ரேஷ் ஏற்பட்டு மற்ற உடல் பகுதிகளுக்கும் பரவ தொடங்கிடும். தோல் வெடிப்பு நிலை 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். இது, புண்களை ஆழமாக்கி சீழ் ஏற்படுத்தி, ஸ்கேப்ஸ் அல்லது கரஸ்ட் உருவாக்கி அதிக வலியை தருகிறது.

Monkeypox Virus: இங்கிலாந்தில் ஒருவருக்கு MonkeyPox தொற்று… மனித குலத்திற்கு புதிய ஆபத்தா? அதென்ன குரங்கு காய்ச்சல்?

இறப்பு சதவிகிதம்

குரங்கு காய்ச்சல் நோய் காரணமாக இறக்கும் நோயாளிகளின் விகிதம் 0 முதல் 11% வரை உள்ளது. சிறு குழந்தைகளிடையே அதிகமாக உள்ளது.

சிகிச்சை

குரங்கு காய்ச்சலுக்கு இதுவரை முறையான சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறிகளைப் பொறுத்து சிகிச்சைகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. தொற்றுநோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் விழிப்புணர்வு அவசியம் என கூறப்படுகிறது.

வரலாறு

1958 இல் குரங்கு காய்ச்சல் நோய் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த காலனி குரங்குகளிடம் 2 முறை அம்மை நோய் கண்டறியப்பட்டதையடுத்து உறுதி செய்யப்பட்டது.

1970 ஆம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் பெரியம்மை நோயை அழிப்பதற்கான முயற்சியில், முதன்முதலாக மனிதனுக்கு குரங்கு காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 15 நாடுகளில் இதுவரை மனிதர்களுக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தியுள்ளன.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காபோன், கேமரூன், நைஜீரியா, கோட் டி ஐவரி, லைபீரியா மற்றும் சியரா லியோன் போன்றவற்றில் அதிகளவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென் சூடான், ஆப்பிரிக்காவில் பெனின், அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
Embed widget