மேலும் அறிய
மதுரை: 28-06-2026 போலியோ சொட்டு மருந்து முகாம்.. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு !
சொட்டு மருந்து பணியைக் கண்காணிக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போலியோ சொட்டு மருந்து
Source : whatsapp
5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாது போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயை முழுமையாக ஒழிக்க வேண்டும் - என் கேட்டுக் கொண்டுள்ளார்.
போலியோ சொட்டு மருந்து முகாம்
போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு கடந்த 03/03/2024 தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் பலனாக இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தொடர 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து 28-06-2026 அன்று கூடுதலாக கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்படும்.
இம்முகாமில் மதுரை மாவட்டத்தில் 232959 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இம்முகாமிற்கு மதுரை மாவட்டத்தில் மொத்தம் 1705 பூக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 1243 பூக்களும், நகர்ப்புறங்களில் 462 பூக்களும் இம்முகாமிற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேறு மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், செங்கல் காளவாசல் பகுதிகள், நரிக்குறவர் குடியிருப்புகள், இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் போன்ற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த சொட்டு மருந்து மையங்கள் அரசு மருத்துவனை. ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், சத்துணவு மையங்களில் அமைந்துள்ள சொட்டு மருந்து வழங்கும் பூத்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும். கூடுதலாக நடமாடும் குழுக்கள் மூலமாகவும் பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் பூக்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்படும்.
330 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சொட்டு மருந்து பணியைக் கண்காணிக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக 13 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர்த்து சுகாதாரத் துறை மூலமாக 17 மேற்பார்வையாளர்களும், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 330 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியில் சுகாதாரத் துறை மூலமாக 1083 பணியாளர்கள், சத்துணவுத் துறை மூலமாக 2545 பணியாளர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாக 42 பணியாளர்கள் உட்பட 7412 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முகாமிற்குத் தேவையான பொது சுகாதாரத் துறையைச் சார்ந்த வாகனங்கள் 44 மற்றும் பிற துறை வாகனங்கள் 57 ஈடுபடுத்தப்பட உள்ளன. எனவே, இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து போட்டிருந்தாலும், இந்த சொட்டு மருந்து முகாம் நாளன்று பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாது போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயை முழுமையாக ஒழிக்க வேண்டுமாய் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















