Diabetes and Obesity : சென்னையில் இத்தனை பேரில் ஒருவருக்கு இந்த பிரச்சனையா? தலைநகரை அதிரவைக்கும் தகவல்..
சென்னையில் இத்தனை பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோயா? அதிரவைக்கும் தகவல்..
சென்னை மக்களை புதிதாக ஒருவகை நோய் தாக்கி வருகிறது. அவர்களில் உடல் பருமன் மற்றும் டைப் 2 நீரிழிவு இரண்டும் சேர்ந்து டயாப்சிட்டி என்கிற நோய் பெரும்பாலானவர்களில் கண்டறியப்பட்டு வருகிறது.
சென்னையில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் 10ல் 3 நபர்களுக்கு அதுவும் குறிப்பாகப் பெண்களில் இந்த பாதிப்பு காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்த நீரிழிவு இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற அபாயங்களை அதிகரிக்கும். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் சுகாதார கண்காணிப்பு ஆய்வின் ஒரு பகுதியாக மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்கண்ட கண்டுபிடிப்புகள் இருப்பதாக தற்போது கூறப்படுகிறது. இந்த ஆய்வுக்கு இங்கிலாந்தின் தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி நிறுவனம் நிதியளித்துள்ளது.
ஆய்வு விவரம்:
சென்னை மாநகராட்சியால் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 வார்டுகளில் இருந்து, ஆராய்ச்சியாளர்கள் 1138 பெரியவர்களை சுகாதார கண்காணிப்பு ஆய்வுக்காக தேர்ந்தெடுத்தனர். இது மே 2018 மற்றும் செப்டம்பர் 2021க்கு இடையில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் 683 பெண்கள் பங்கேற்றனர். அந்த பெண்களில் 26.3 சதவிகிதம் பேர் ஃபாஸ்டிங் குளுக்கோஸ் அளவை (நீரிழிவு சோதனை) 126 மிலி டெசி லிட்டருக்கு க்கும் அதிகமாகவும், 25.6 சதவிகிதம் பேருக்கு Hba1c (நீரிழிவு சோதனை) 6.5 க்கு மேல் இருந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் குளுக்கோஸ் டாலரன்ஸ் சோதனையைப் பயன்படுத்தாமல், ஃபாஸ்டிங் குளுக்கோஸ் மற்றும் HbA1c குறியீட்டை ஐப் பயன்படுத்தியதால், ஒட்டுமொத்த நீரிழிவு நோய் எண்ணிக்கை சென்னை மாநகரத்தின் முந்தைய மதிப்பீடான 35 சதவிகிதத்தை விட 43 சதவிகிதம் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. அதாவது முன்பை விட தற்போது நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு வரலாறு :
நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ல்ஸ் பெஸ்ட் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் ஆகியோருடன் இணைந்து 1922 இல் ஃப்ரெட்ரிக் பான்டிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே நவம்பர் 14ஆம் தேதி நீரிழிவு நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது. ஐ.நா. சபை, நீலநிறத்திலான வளையத்தை அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் பெருமளவில் அனைவரிடத்திலும் சென்று சேர்ந்தது. நீரிழிவு நோயாளிகளின் உடல் மற்றும் மன நலன்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நோய்க்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நோயாளிகளுக்கு உயிர்க்காக்கும் மருந்துகளை உருவாக்குவதற்கான நிதியைத் திரட்டுதல் போன்றவை இந்த நாளின் மையமாக உள்ளது.
நீரிழிவு நோய்:
நம் உடல் உள்ளுறுப்புகள் தொடங்கி, சுரப்பிகள் வரை அனைத்தும் சீராக செயல்பட வேண்டும். இல்லையேல் நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும். நீரிழிவும் நோயும் அப்படியே! இன்சுலின் அளவு அதிகமாவது அல்லது அதில் ஏற்படும் சீரற்ற தன்மை ஆகியவற்றினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசி ஏற்படுவது அல்லது பசிப்பது போன்ற உணர்வு, தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, பெரும்பாலும் சோர்வான உணர்வு இருக்கும், உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும், காரணமில்லாமல் எடை குறைதல், மிகக் கூடுதல் எடை, கால் மரத்துப் போய் உறுத்துதல், மங்கலான பார்வை உள்ளிட்டவைகள் இவற்றின் அறிகுறிகளாக சொல்கிறது மருத்துவ உலகம்.
சிகிச்சை:
நீரிழிவு நோய்க்கான அறிகுகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துரை அணுகு அதை கண்டறிவது முக்கியம். இன்றைய மருத்துவ உலகில் பல சிகிச்சைகள் இருந்தாலும் நோய் வராமல் தடுப்பதே சிறந்தது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )