Heart Attack Prevention Tips: இதய நோயில் இருந்து தப்பிக்க முக்கியமான டிப்ஸ்!
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது, புகைப்பழக்கத்தை கைவிடுவது போன்ற டிப்ஸ்களை பின்பற்றி, உங்களது உடல்நலம் குறித்து தெரிந்து கொண்டு உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்.
நீண்ட நாட்கள் வாழ, உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக அவசியமாகும். முக்கியமாக, அறிகுறிகள் தென்படாமல் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளில் இருந்து காத்து கொள்ள, முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெரும்பாலும், வயதானவர்களுக்குதான் இதய நோய் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் என்ற சூழல் இருந்தாலும், இதய பாதிப்பு எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடியது.
உலக இதயக் கூட்டமைப்பின் தகவலின்படி, நெருங்கிய இரத்த சொந்தங்களான அப்பா, அம்மா, சகோதர சகோதரிகளுக்கு இதய நோய் பாதிப்பு இருக்குமாயின், அவர்களது வாரிசுகளுக்கும் இதய நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதய நோய் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது நல்லது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது, புகைப்பழக்கத்தை கைவிடுவது போன்ற டிப்ஸ்களை பின்பற்றி, உங்களது உடல்நலம் குறித்து தெரிந்து கொண்டு உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்.
Health Insurance | ஹெல்த் முக்கியம் பிகிலு..! பெண்களுக்கான பெஸ்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளான்கள் இதோ..
1. குடும்ப பின்னணியை தெரிந்து கொள்ளவும்
இதய நோய் சம்பந்தமான பாதிப்புகளை பொருத்தவரை, அது தொடர்பான அறிகுறிகள் எளிதில் தென்படாது. அதனால், குடும்ப வரலாற்றில் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு இருக்குமாயின், முன்னெச்சரிக்கையாக இருப்பவது அவசியம்.
2. பரிசோதனை செய்து கொள்ளவும்
18 வயது நிரம்பியவர்கள், சர்க்கரை, இரத்த அழுத்தம், லிபிட் அளவு போன்றவற்றின் அளவுகளை காட்டும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குடும்பத்தின் முன்னோர்களுக்கு இதய பாதிப்பு இருக்குமாயின், அவர்களது குழந்தைகள் இது போன்ற பரிசோதனைகளை முன்கூட்டியே செய்து கொள்வது நல்லது.
Rheumatoid Arthritis | முடக்கு வாதம் எனும் ருமட்டாய்டு ஆர்தரைட்டிஸ் வராமல் தடுக்கமுடியுமா?
3. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்
காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், மீன் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளவும். டிரான்ஸ் ஃபேட் குறைவான உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.
4. புகைப்பழக்கத்தை விடவும்
புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு இதய நோய் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, காரணம் ஏதும் சொல்லாமல், கண்டிப்பான முறையில் புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டியது அவசியமாகும்.
‛இது இல்லைன்னா ரொம்ப கஷ்டம்...’ 3வது அலை குறித்து வல்லுநர் எச்சரிக்கை!
5. உடற்பயிற்சி செய்யவும்
நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங் போன்ற பயிற்சிகளை தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு செய்து வந்தால், இதய நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். இந்த பயிற்சிகளை செய்வதனால், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும், அதனால் இதய பாதிப்புகளை தவிர்க்கலாம்.
கொரோனா தாக்கியவர்களை அச்சுறுத்தும் புதிய எலும்பு நோய் - ஏவிஎன் என்றால் என்ன?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )