கருவுற்றிருக்கும்போது வரும் தலைவலிகள்: காரணம் என்னென்ன?
யாராக இருந்தாலும் ஒற்றைத் தலைவலி என்பது திருகுவலி கதைதான். அதுவும் கருவுற்றிருப்பவர்களுக்குச் சொல்லவே தேவையில்லை.
கருவுற்றிருக்கும் காலத்தில் வாந்தி, குமட்டல், வயிற்று வலி என பல்வேறு உபாதைகள் ஏற்படுவதன் வரிசையில் அடிக்கடி தலைவலி ஏற்படுவதும் இயல்பான ஒரு விஷயம். ஆனால் ஒவ்வொருமுறை தலைவலி ஏற்படுவதற்கும் பல்வேறு காரணங்கள் உண்டு. தலைவலி ஏற்படுவது அச்சுறுத்தும் விஷயம் இல்லை என்றாலும் நாள்பட்ட அளவில் அது நீடிக்கும் நிலையில் அதனை கவனிக்க வேண்டியது அவசியம். ஹார்மோனில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் இரத்த அழுத்தத்தில் நிகழும் ஏற்ற இறக்கம் ஆகிய பல்வேறு நிகழ்வுகள் இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.இந்தத் தலைவலியில் பல வகைகள் உண்டு...
உதாரணத்துக்கு, கிளஸ்டர் தலைவலி என்னும் ஒருவகை தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை ஏற்படுத்தும். இதனால் 15 நிமிடம் முதல் 3 மணிநேரம் வரை வலி நீடிக்கும்.பின்புற மூளையில் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவகை மாற்றத்தால் இது ஏற்படுகிறது. அதனால் கண்ணைச் சுற்றி வலி ஏற்படுவது போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற சிக்கல்களால் இது ஏற்படுகிறது. சீரான மூச்சுப்பயிற்சி போன்றவற்றை வழக்கப்படுத்திக் கொள்வது இதனைத் தணிக்கும்.
மற்றொரு வகை, சைனஸ் தலைவலி. சுவாசப் பாதையில் பாக்டீரியா வைரஸ் தொற்றால் அழற்சி ஏற்படுவதால் இது உண்டாகிறது. கன்னப் பகுதிகளில் வலி, முகவீக்கம். கசப்பு சுவை, காய்ச்சல், நெற்றி வலி, சளி போன்ற பிரச்னைகள் இதன் அறிகுறிகள். காய்ச்சல் சளி போன்றவற்றுடன் இணைந்து இந்த வகை தலைவலி ஏற்படலாம். அதனால் காய்ச்சலுக்குக் காரணமான நுண்ணுயிரிக்கு எதிரான மருந்தை எடுத்துக் கொள்வதே இதற்கான ஒரே தீர்வு
யாராக இருந்தாலும் ஒற்றைத் தலைவலி என்பது திருகுவலி கதைதான். அதுவும் கருவூற்றிருப்பவர்களுக்குச் சொல்லவே தேவையில்லை. ஒற்றைத் தலைவலி ஒன்று அல்லது இரண்டு பக்கங்களிலும் கடுமையான வலியை உண்டாக்கும். சில சமயம் நாட்கணக்கில் கூட இந்த வலி நீடிக்கும். குமட்டல் வாந்தி வயிற்றுவலி, அதீத சத்தம் போன்றவை ஒற்றைத் தலைவலிக்கு தூண்டுதலாக உள்ளது. கருவுற்றிருக்கும் காலத்தில் குழந்தை குறித்த மன அழுத்தம், சூழல் ஏற்படுத்தும் அழுத்தம் ஆகியன, உணவு ஒவ்வாமை, போன்றவை ஒற்றைத்தலைவலியை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்களில் சரிபாதி பேருக்கு இந்தப் பிரச்னை உள்ளது. குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இது அதிகமாக இருக்கும். குழந்தை பெற்ற பிறகும் இந்தப் பிரச்னை ஏற்படும். ஆனால் அது எந்த வகையிலும் பிள்ளையை பாதிக்காது. நல்ல உறக்கம், அவ்வப்போது ரிலாக்ஸ் செய்வது, ஒற்றைத் தலைவலியை தூண்டும் எதையும் செய்யாமல் இருப்பது, உடற்பயிற்சி தலையில் மசாஜ் போன்றவை இதனைக் குறைக்கவும் தடுக்கவும் உதவுகிறது
ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பது ஆகிய காரணங்களால் பேறு காலத்தில் தலைவலி ஏற்படுகிறது. மன அழுத்தம், மோசமான நிலையில் அமர்வது நிற்பது போன்றவை கூட காரணமாகக் கூறப்படுகிறது. தலைவலி காரணமாக சிலருக்குக் கண் பார்வையில் மாற்றங்கள் ஏற்படும். இதுதவிர குழந்தை வளரும்போது அதன் உடல்நலனில் மாறுபாடு ஏற்படுதல், தாயின் சர்க்கரை அளவில் மாறுபாடு ஏற்படுதல் போன்றவையும் தலைவலி ஏற்படுவதற்கான இதர காரணங்களாக இருக்கின்றன.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )