சுய இன்பம் செய்வதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுமா? என்ன சொல்கிறது அறிவியல்?
அதிகமாக சுய இன்பம் செய்வதால் கைகளில் முடி வளரும் என்றும், சிறுநீரகங்களைப் பாதிக்கும் என்றும், பாலியல் குறைபாடு ஏற்படும் என்றும் பெரும்பாலான தவறான செய்திகள் பரவி வருகின்றன.
சுய இன்பம் பற்றிய தவறான தகவல்கள் இணையம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. அதிகமாக சுய இன்பம் செய்வதால் கைகளில் முடி வளரும் என்றும், சிறுநீரகங்களைப் பாதிக்கும் என்றும், பாலியல் குறைபாடு ஏற்படும் என்றும் பெரும்பாலான தவறான செய்திகள் பரவி வருகின்றன. சுய இன்பம் செய்வதால் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படும் என்ற சிந்தனை பாரம்பரிய சீன மருத்துவத்தில் இருந்து உற்பத்தியான ஒன்று.
பாரம்பரிய சீன மரபு மருத்துவ நம்பிக்கையின்படி, சிறுநீரகக் குறைபாடு உள்ள ஆண்களின் பாலியல் வேட்கை குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இதனை நிரூபிக்கும் அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும், அதிக சுய இன்பம் கொள்வது பெரிய பாதிப்புகள் எதனையும் ஏற்படுத்துவது இல்லை என்று அறிவியல் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.
சிறுநீரக நோய்களை சுய இன்பம் உருவாக்கும் என்பதற்கு அடிப்படை அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை. விந்தணுக்கள் வெளியேறுவதால் அதன்மூலமாக சத்து இழக்கப்பட்டு, அதன்மூலமாக சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. விந்தணுக்களின் ஆற்றலை அதிகரிக்க அவற்றில் சில சத்துகள் இடம்பெற்றிருக்கின்றன. எனினும், இவற்றை இழப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ஒரு முறை வெளியேறும் விந்தணுக்களில் சுமார் 0.25 கிராம் புரதச் சத்து வெளியேறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட அரை டீ ஸ்பூன் அளவிலான பால் குடித்தால் போதும் என்கின்றன இந்த ஆய்வுகள்.
எனினும் சுய இன்பம் செய்வதால் சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் கரைவதற்கான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், வாரம் 3 முதல் 4 முறை சுய இன்பம் செய்வது சிறுநீரகத்தில் உருவாகும் 5 முதல் 10 மில்லிமீட்டர் கற்களை கரைக்கும் தன்மை உண்டு. எனினும் இந்த ஆய்வுகள் மேற்கொண்டு ஆராயப்பட வேண்டும் என்பதால், இதனை உலகம் முழுவதும் ஆய்வாளர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
சுய இன்பம் செய்வதால் சிறுநீரகப் பாதிப்பு, பிற நோய்கள் முதலான நோய்கள் ஏற்படும் என்று கூறப்படுவதில் எந்த அறிவியல் பின்புலமும் இல்லை. சுய இன்பம் செய்வதால் உங்கள் மனநலம் மேம்படலாம்; நல்ல தூக்கம் வருவதற்கும் உதவலாம். எனவே சுய இன்பம் செய்வதா, வேண்டாமா என்பது ஒவ்வொரு தனிப்பட்டவர்களின் தேர்வு. பிடித்திருந்தால் மேற்கொள்ளலாம்; பிடிக்கவில்லை எனில் மேற்கொள்ளாமல் இருப்பதும் தவறு அல்ல. நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் மேற்கொள்வதாக உங்களுக்குத் தோன்றினால், இதுகுறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கோருவது சிறந்தது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )