மேலும் அறிய
Advertisement
மதுரை : தடுப்பூசி பணிகள் தொடங்கப்பட்டதா? 5 மாவட்ட கொரோனா நிலவரம் என்ன?
மதுரையில் இன்று கோவேக்சின் இரண்டாவது டோஸ் போடப்பட்டதில் மொத்தம் இருந்த 2500-ல் 1666 டோஸ் கையிருப்பு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த சில நாட்கள் தடுப்பூசி இல்லாத சூழல் இருந்தது. தற்போது ஆங்காங்கே மீண்டும் தடுப்பூசி கிடைக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மதுரைக்கு நேற்று இரவு 2500 - டோஸ் தடுப்பூசி புதிதாக வந்தது. இதனால் கடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2500 டோஸ் கோவேக்சின் மட்டுமே வந்துள்ளதால் கோவாக்சின் இரண்டாவது டோஸ் செலுத்துபவர்களுக்கு மட்டுமே இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களில் குறைந்த எண்ணிக்கை அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்துவது குறித்த முன் அறிவிப்பு ஏதும் இல்லாததால் அனைத்து மையங்களிலும் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் தகவல் தெரியும்பட்சத்தில் தொடர்ந்து மக்களின் கூட்டம் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 3,73,769 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று கோவேக்சின் இரண்டாவது டோஸ் போடப்பட்டதில் மொத்தம் இருந்த 2500-ல் 1666 டோஸ் கையிருப்பு உள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 283 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69597-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 1060 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 61517-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1016 இருக்கிறது. இந்நிலையில் 7064 கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் விசாரித்தோம்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 290 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42151-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 485 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 38453-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 479 இருக்கிறது. இந்நிலையில் 3219 கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 117 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16046-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 215 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 14446-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 179 இருக்கிறது. இந்நிலையில் 1421 கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 125 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18565-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 1190- நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 16914-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 300 இருக்கிறது. இந்நிலையில் 1351 கொரோனா பாதிப்பால் இராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 159 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25349-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 301 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 23203-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 257 இருக்கிறது. இந்நிலையில் 1889 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை மிஸ் பண்ணாதீங்க பிளீஸ் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion