மேலும் அறிய
Advertisement
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி கொரோனா நிலவரம்
கோவை மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இன்று 5 ஆயிரத்துகும் கீழ் குறைந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 563 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 18 ஆயிரத்து 990 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இன்று 5 ஆயிரத்துகும் கீழ் குறைந்துள்ளது. தற்போது 4676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 12 ஆயிரத்து 285 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 12 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2029 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
ஈரோடு மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. ஈரோட்டில் இன்று 493 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 546 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 4163 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 89212 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 84461 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 588 ஆகவும் உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 281 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 396 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1722 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 82103 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 79631 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 750 ஆகவும் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 75 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 86 பேர் குணமடைந்துள்ள நிலையில், 654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 28266 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27448 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion