Coronavirus Second Wave: இதுவரை 719 டாக்டர்கள் பலி, தமிழ்நாட்டில் 32 டாக்டர்கள்..!
கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலையில் தமிழ்நாட்டில் இதுவரை 32 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 719 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகமாகவே இருந்தன. முதல் அலையில் இருந்து டாக்டர்கள் இரவு, பகல் பாராமல் தங்களின் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி வருகின்றனர். தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனாவுக்கு எதிராக டாக்டர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 719 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது. பீகாரில் அதிகபட்சம் 111 டாக்டர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் 109 டாக்டர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் இதுவரை 32 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையின்போது மொத்தம் 736 டாக்டர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Indian Medical Association (IMA) says 719 doctors died during second wave of COVID-19 pandemic; maximum 111 doctors lost their lives in Bihar, followed by Delhi (109) pic.twitter.com/4CCFSIMZj6
— ANI (@ANI) June 12, 2021
முன்னதாக, கடந்த 2ஆம் தேதி இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் 594 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் 21 டாக்டர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது.
Indian Medical Association (IMA) says 594 doctors died during the second wave of COVID-19 pic.twitter.com/rbFbwhgL55
— ANI (@ANI) June 2, 2021
இந்தியாவில் கடந்த மே 17ஆம் தேதி டெல்லியை சேர்ந்த 26 வயதான டாக்டர் அனஸ் முஜாஹித் கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்தார். இதுவரை உயிரிழந்த டாக்டர்களில் மிகவும் குறைந்த வயதில் உயிரிழந்த டாக்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியா முழுவதும் 17ஆம் தேதி ஒரே நாளில் 50 டாக்டர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டது.

கொரோனா நோயாளிகளுக்கு முழு ஈடுபாடோடு டாக்டர்கள் பணிபுரிந்துவருகின்றனர். ஆனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க குறைவான அளவிலேயே டாக்டர்கள் இருப்பதால், ஓய்வின்றி தொடர்ந்து 48 மணி நேரம் வேலை பார்க்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இக்கட்டான சூழலில் டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை இந்திய மருத்துவ சங்கத்தினர் முன்வைக்கின்றனர். கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் டாக்டர்களின் உயிரிழப்பு பேரதிர்ச்சியாக உள்ளது.
கொரோனா முதல் அலையில் 736 டாக்டர்கள் உயிரிழந்ததாக அறிக்கைகள் வெளியான நிலையில், அது இன்னும் அதிகமாகவே இருக்கும் என டாக்டர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதே போல மருத்துவ பணியாளர்கள் பலரும் எண்ணற்ற அளவில் உயிரிழந்துள்ளனர்.
Coronavirus India Updates: தொடர்ந்து குறையும் கொரோனா... ஆனாலும் அலர்ட்டா இருங்க!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















