Coronavirus India Updates: தொடர்ந்து குறையும் கொரோனா... ஆனாலும் அலர்ட்டா இருங்க!
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 90 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இது ஆரோக்கியமான தகவல் ஆகும்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84,332 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 97 ஆயிரம், நேற்று 91 ஆயிரமாக இருந்த பாதிப்பு இன்று 84 ஆயிரமாக ஆக குறைந்துள்ளது. 70 நாட்களுக்கு பிறகு, குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரேநாளில் 91,702 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து 83 ஆயிரத்து 121இல் இருந்து 2 கோடியே 92 லட்சத்து 74 ஆயிரத்து 823-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 4,002 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்து 79ல் இருந்து 3 லட்சத்து 67 ஆயிரத்து 81-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 311 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரத்து 73இல் இருந்து 2 கோடியே 79 லட்சத்து 11 ஆயிரத்து 384 ஆக அதிகரித்துள்ளது.
India reports 84,332 new #COVID19 cases (lowest after 70 days), 1,21,311 patient discharges, & 4,002 deaths in last 24 hours, as per Health Ministry
— ANI (@ANI) June 12, 2021
Total cases: 2,93,59,155
Total discharges: 2,79,11,384
Death toll: 3,67,081
Active cases: 10,80,690
Vaccination: 24,96,00,304 pic.twitter.com/Bllu88CdlJ
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 95.07 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.25 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்து 80 ஆயிரத்து 690-ஆக குறைந்துள்ளது. இதுவரை 24 கோடியே 96 லட்சத்து ஆயிரத்து 304 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.
சரத் பவார்- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்?
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், கொரோனா 2வது அலையால் தொற்று பரவல் குறையாமல் மார்ச், மே மாதங்களில் அதிகமாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், தொற்று குறைந்து வருவதால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்