Coronavirus LIVE Updates : கேரளாவில் உச்சத்தில் கொரோனா - இன்றும் 20ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஓரிரு தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் நாட்டில் கொரோனா பாதிப்பு அதற்கு முந்தைய வாரத்தை காட்டிலும் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.86 லட்சமாக பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 2.66 லட்சமாக பதிவாகியிருந்தது. இந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி நாட்டில் புதியதாக 40 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, தினசரி பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு தொடர்ந்து 6வது நாளாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 422 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் உச்சத்தில் கொரோனா
கேரளாவில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,119