மேலும் அறிய

விழுப்புரம்‌ : 163 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று! 3பேர் உயிரிழப்பு!

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ 163 நபருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ இதுவரை 41198 பேர்‌ கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்களில்‌ 38365 போ்‌ குணமடைந்தனர்‌. 318 போ்‌ உயிரிழந்தனர்‌. இந்த தினசரி பாதிப்பு பொதுமுடக்கம்‌ காரணமாக படிப்படியாகக்‌ குறையத்‌ தொடங்கியது. இந்தநிலையில் இன்று (17-06-2021)  163 நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒருவர் இறந்துள்ளனர். இதே நிலை நீடித்தால்‌, விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ குறைந்து, பாதிப்பு வெகுவாகக்‌ குறைய வாய்ப்புள்ளது.  இந்த புள்ளி விவரங்கள்‌ விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட விழுப்புரம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌துறையினர்‌ தெரிவித்தனர்‌. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.

விழுப்புரம்‌ : 163 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று! 3பேர் உயிரிழப்பு!

ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 முதல் 500 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் கொரோனா வார்டுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. மாவட்டத்தில் ஒரே வீதியில் 3 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமிநாசினியால் நன்கு சுத்தம் செய்யப்படுவதோடு அந்த பகுதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம்‌ : 163 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று! 3பேர் உயிரிழப்பு!

அந்த வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நாப்பாளைய தெரு, காமராஜர் வீதி, மகாராஜபுரம் குயவர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட 18 இடங்களும் மற்றும் ஊரக பகுதிகளான அரசூர், திருமுண்டீச்சரம், வி.நெற்குணம், பள்ளித்தென்னல், நன்னாடு, தொடர்ந்தனூர், கூனிமேடு, ஒதியத்தூர், ஆகாசம்பட்டு, கோலியனூர், மாம்பழப்பட்டு உள்ளிட்ட 105 இடங்களும் என மாவட்டம் முழுவதும் 123 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கிருமிநாசினி திரவத்தால் நன்கு சுத்தம் செய்யப்பட்டதோடு அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் இருக்கவும், அதுபோல் வெளிநபர்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழையாதவாறு இருக்கவும் அப்பகுதிகளை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டுவருகின்றன.

விழுப்புரம்‌ : 163 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று! 3பேர் உயிரிழப்பு!

இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் விக்கிரவாண்டி, வானுார், செஞ்சி, திண்டிவனம் ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் விழுப்புரம், திண்டிவனத்தில் தலா ஒரு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றது. ஆக்சிஜன் படுக்கைகள் இதில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மொத்தம் 186 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 400 ஆக்சிஜன் படுக்கைகள். இதில், 59 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. இந்த படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் 24,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஆக்சிஜன் டேங்கர் உள்ளது. இதில், 18,000 முதல் 19,000 லிட்டர் மட்டுமே ஆக்சிஜன் நிரப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget