சேலம் மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு தொற்று உறுதி; 5 பேர் உயிரிழப்பு!
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, மூன்றாம் அலை அச்சத்தில் சேலம் மக்கள்.
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1610 ஆக உள்ளது. மேலும் 97 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 92,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,817 ஆக உயர்வு. மாவட்டத்தில் 949 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 5462 பரிசோதிக்கப்பட்டதில் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதத்திற்கு பிறகு ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று வரை 10 லட்சத்து 70 ஆயிரத்து 830 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி குறைந்த அளவே வருவதால் ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சேலம் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி இருப்பு இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலத்தில் உள்ள 138 மையங்களிலும் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கூடுதல் தடுப்பூசி சேலம் மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பாதிப்பு:
தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு எதுவுமில்லை. மேலும் 28 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 238 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 25,987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,504 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 2175 பரிசோதிக்கப்பட்டதில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 27 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவுமில்லை. நோயிலிருந்து குணமடைந்த 31 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 257 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 327 ஆக உள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41,158 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,742 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 1630 பரிசோதிக்கப்பட்டதில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை குறைந்த மக்களுக்கு மட்டுமே எடுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )