(Source: ECI/ABP News/ABP Majha)
நீரிழிவை குணப்படுத்துமா இலவங்கப்பட்டை: ஆய்வு சொல்வது என்ன?
இலவங்கப்பட்டை இந்திய உணவுகளில் முக்கிய மசாலாப் பொருட்களில் ஒன்றாகவும், பிரியாணி செய்முறையில் சேர்க்கப்படும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது
இலவங்கப்பட்டை பல்வேறு வகையான இலவங்கப்பட்டை மரங்களின் பட்டைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இலவங்கப்பட்டையின் மருத்துவப் பலன்கள் விலைமதிப்பற்றது. பல்வேறு சுகாதாரக் கேடுகளுக்கு சிகிச்சை அளிக்க இலவங்கம் பயன்படுத்தப்படுகிறது. இலவங்கப்பட்டை நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தலாமா என்கிற ஆய்வு அண்மைக்காலமாக நடந்து வருகிறது.
இலவங்கப்பட்டை மசாலாப் பொருளாக மட்டுமே பயன்படுத்த முடியும், இது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை கணிசமாகக் குறைக்கிறதா என்பது இன்னும் நிருபணமாகவில்லை,சில ஆய்வுகள் அதன் நலன்களை விவரித்தாலும் இலவங்கப்பட்டையின் வெவ்வேறு பகுதிகளைக் கொண்டு அந்த ஆய்வுகள் நடத்தப்படுவதால் அதுவும் சரியான ஆய்வு முடிவுதானா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
2012ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 69 சீனர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். ஒரு குழு தினசரி 120 மில்லி கிராம் இலவங்கப்பட்டை உட்கொண்டது. மற்ற குழு 360 மில்லிகிராம் இலவங்கப்பட்டை உட்கொண்டது. மூன்றாவது குழு கண்ட்ரோலாக வைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, கண்ட்ரோல் குழுவில் எந்த மாற்றமும் இல்லை, அதேசமயம் இலவங்கப்பட்டையை உட்கொண்ட இரண்டு குழுக்களுக்கும் அவர்களது A1C அளவுகள் வீழ்ச்சியடைந்தன. 10 கட்ட சோதனைகளின் 2013 மெட்டா பகுப்பாய்வில், இலவங்கப்பட்டை நுகர்வு இரத்த சர்க்கரை, மொத்த கொழுப்பு, எல்டிஎல் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளை கணிசமாகக் குறைந்தது தெரியவந்தது. மேலும், உயர் அடர்த்தி கொழுப்புப்புரதத்தின் (HDL) அளவும் உயர்ந்திருந்தது.
ஒவ்வொரு ஆய்விலும் பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை வகைகளில் வேறுபாடுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தினசரி 3 முதல் 6 கிராம் இலவங்கப்பட்டை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது என்று 2019ம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வைட்டமின்கள் மற்றும் இலவங்கப்பட்டை எவ்வாறு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிறுவ கூடுதல் ஆராய்ச்சி தேவை. ஆனால் அதன் பண்புகள் நீரிழிவைத் தவிர பொதுவான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.
இலவங்கப்பட்டையின் மற்ற நன்மைகள்
பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் இலவங்கப்பட்டை சாறு அழற்சி நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இலவங்கப்பட்டையின் பயோஆக்டிவ் மூலப்பொருள் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும்.
இலவங்கப்பட்டை எவ்வாறு உட்கொள்ளலாம்?
இலவங்கப்பட்டை இந்திய உணவுகளில் முக்கிய மசாலாப் பொருட்களில் ஒன்றாகவும், பிரியாணி செய்முறையில் சேர்க்கப்படும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் செய்வது போல நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனைத் தூளாக்கி நமது தேநீர், இனிப்புகள் அல்லது கஞ்சியில் சுவைக்காக தூவலாம். இது நறுமணத்தை கூட்டி சுவையை அதிகரிக்கும்.
இது தவிர, இதை ரோல்ஸ், வேகவைத்த உணவுகள் மற்றும் ஸ்மூத்திகளிலும் பயன்படுத்தலாம். இருப்பினும், சரியான அளவு உட்கொள்வது முக்கியம். தினமும் 1/2- 1 டீஸ்பூன் (3-5 கிராம்) இலவங்கப்பட்டையை உட்கொள்ளலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, வெவ்வேறு ஆய்வுகள் வெவ்வேறு முடிவுகளைக் காட்டுகின்றன, எந்த ஒரு ஊட்டச்சத்தும் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, இரத்த சர்க்கரை கண்காணிப்பு, நீரிழிவு மருந்து அல்லது இன்சுலின் சிகிச்சையை தவறாது எடுத்து வரவேண்டும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )