மேலும் அறிய

Desk Yoga : ஒரே இடத்துல உக்காந்துட்டு இருக்கீங்களா? ஈஸியா சேர்ல உக்காந்தே செய்ய 10 யோகா..

Yoga for working people: ஒரு நாளைக்கு சுமார் 8-9 மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வதால் நிச்சயமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும். அவர்கள் தினசரி சில நிமிடங்கள் யோகா பயிற்சிகள் செய்யலாம்.

Yoga : யோகா செய்ய நேரமில்லயா? டேபிள் மேலே யோகா - 10 ஈஸியான யோகா பயிற்சிகள் 

ஒரு நாளைக்கு சுமார் 8-9 மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வதால் நிச்சயமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பது அனைவர்க்கும் தெரிந்திருக்கும். அது உங்களின் இடுப்பு மற்றும் முதுகுத்தண்டில் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு கீழ் முதுகு, கழுத்து வலி, தோள்பட்டை போன்றவற்றிலும் வலி ஏற்படலாம். 

இது போன்ற சமயங்களில் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே தினசரி சில நிமிடங்கள் யோகா பயிற்சிகள் செய்வதன் மூலம் பலன் அடையலாம். 

Chair Pigeon Pose : நாற்காலியில் அமர்ந்து கொண்டே உங்களின் உங்களின் கால்களை தரையில் வைக்கவும். நாற்காலியில் அமரும் போது எப்பொழுதுமே சம எடையை பராமரிக்கவும். உங்களின் இடது தொடையை சற்று நீட்டி உட்காருங்கள். 10-15 வினாடிகளுக்கு பிறகு மற்ற கலீல் செய்யவும். இந்த Chair Pigeon Pose  செய்வதால் இடுப்பு தசைகள் மற்றும் குளுட்டுகளை நீட்டுகிறது இதனால் இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். 

Desk Chaturanga : உங்களின் கைகளை மேசையின் அகலத்திற்கு விளிம்பில் வைக்கவும். உங்களின் கால்களை பின்னல் வைக்கவும். உங்கள் உடல் குறுக்காக இருக்கும். இப்பொழுது மூச்சை நன்றாக உள் இழுத்து உங்கள் முழங்கைகளை 90 டிகிரி கோணத்தில் வளைக்கவும். மூச்சை வெளியேற்றும் போது, மார்பை பழைய நிலைக்கு கொண்டு வரவும். இந்த பயிற்சியை 10-12 முறை செய்யவும். இந்த யோகா பயிற்சியை செய்வதன் மூலம் உங்களின் கைகளின் தசைகள் புத்துணர்ச்சி பெறும். கழுத்தையும் வலுப்பெற செய்யும். 

 

Desk Yoga : ஒரே இடத்துல உக்காந்துட்டு இருக்கீங்களா? ஈஸியா சேர்ல உக்காந்தே செய்ய 10 யோகா..

 

Chair Lower Back Stretch : நீங்கள் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் போதே உங்கள் இடுப்பின் தூரத்தில் கால்களை வைத்து தலையை தாழ்த்தி உடலுக்கு ஓய்வு கொடுக்கவும். சில நிமிடங்களுக்கு சாதாரணமாக சுவாசித்தல் போதுமானது. இது தசையையும் முதுகெலும்பையும்  பலப்படுத்தி பதட்டத்தை குறைக்கும். 

Seated Crescent Moon : உங்கள் நாற்காலியில் வசதியான நிலையில் அமர்ந்து கொண்டு உங்கள் கைகளை மேலே தூக்கி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக இணைக்கவும். மெதுவாக ஒரு பக்கம் சாய்ந்து 3-4 தடவை மூச்சை இழுத்து விடவேண்டும். இதை மறுபக்கமும் செய்யவும். இந்த பயிற்சி முதுகுத்தண்டை நீட்டுகிறது மற்றும் வேலையை செய்ய உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. 

Sit and Stand Chair Pose : நாற்காலியில்அமர்ந்து கொண்டே பாதங்களை தரையில் படுமாறு வைக்கவும். உங்கள் குதிகால்களை நன்றாக அழுத்தி  கால்களை பயன்படுத்தி நிற்கும் நிலைக்கு உடலை உயர்த்தவும். மீண்டும் இந்த யோகா பயிற்சியை 10 முறை செய்யவும். இதை செய்யும் போது முன்னோக்கி சாயக்கூடாது. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் மெதுவாக பலவீனமடையும் தொடை மற்றும் குளுட் தசைகளை வலுப்படுத்தும்.  

Yoga Upward Dog : நின்ற நிலையில் கைகளை நேராக வைத்து, இடுப்பை மேசையை நோக்கி லேசாக சாய்த்து மூச்சை இழுத்து, கால்களை நேராக 1 நிமிடம் வைக்கவும். பிறகு மூச்சை வெளியிடவும். இது முதுகெலும்பு மற்றும் மார்பை மேம்படுத்துகிறது. 

Finger and Wrist Stretch : உங்கள் கைகளை மேலே நீட்டி, மணிக்கட்டை பயன்படுத்தி 5 முதல் 10 வட்டங்கள் உள்நோக்கியும் வெளிநோக்கியும் செய்ய வேண்டும். பிறகு விரல்களை விரித்து மூட வேண்டும். 5-10 முறை செய்யவும். இது விரல்களின் தசைகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பதற்றத்தை விடுவிக்கிறது. 

Seated Twist : நாற்காலியில் அமர்ந்து கொண்டே உங்களின் கைகளை பின்புறத்தில் வைக்கவும். உங்களின் வயிறு மற்றும் மார்பை ஒரு பக்கமாக திருப்பவும். 5-10 வரை சுவாசத்தை புடித்து வைத்து பிறகு மறுபுறம் செய்யவும். இது அடிவயிற்றை மசாஜ் செய்கிறது. 

Blinking : உங்கள் கண்களை 10 முறை  வேகமாக சிமிட்டவும். பிறகு கண்களை மூடிய படி 20 வினாடிகள் சுவாசத்தை கவனிக்கவும். இதை 5-6 முறை செய்யவும். இந்த பயிற்சி கண்களை சுத்தப்படுத்தி கண்களுக்கு உயிரூட்டுகிறது. 

Palming : நாற்காலியில் அமர்ந்த படியே மூச்சை ஆழமாக எடுத்து உங்களின் உள்ளங்கைகளை தேய்த்து கண்களுக்கு மேல் வைக்கவும். இது உங்களின் கண்களை ரிலாக்ஸ் செய்யும். இதை 6-7 முறை செய்யவும். உள்ளங்கைகளில் உள்ள சூடு கண்களை சுற்றி உள்ள தசைகளை தளர்த்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய MISSO ரோபோடிக் தொழில்நுட்பம்: முழங்கால் மாற்று சிகிச்சையில் புதிய புரட்சி..
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய MISSO ரோபோடிக் தொழில்நுட்பம்: முழங்கால் மாற்று சிகிச்சையில் புதிய புரட்சி..
500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு... தென் தமிழகத்தில் மருத்துவப் புரட்சி !
500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நிறைவு... தென் தமிழகத்தில் மருத்துவப் புரட்சி !

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
Embed widget