Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கடித்த பாம்பு.. வீட்டில் நடக்கும் சேலை எடுக்கும் போட்டி - பரபரப்பும், கலகலப்பும்
சாமுண்டீஸ்வரியை கடித்த பாம்பு.. வீட்டில் நடக்கும் சேலை எடுக்கும் போட்டி - பரபரப்பும், கலகலப்பும்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவதிக்கு கார்த்திக் தான் ராஜராஜனின் பேரன் என்ற உண்மை தெரிய வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தீபாவதி தனது டீமை கூட்டி கார்த்திக் குறித்த ஆதாரங்களுடன் அவன் தான் ராஜா சேதுபதியின் பேரன் என்ற விஷயத்தை உறுதி செய்கிறாள்.
சாமுண்டீஸ்வரியை கடித்த பாம்பு:
அடுத்து சாமுண்டீஸ்வரியை போனில் தொடர்பு கொண்டு ராஜசேதுபதியின் பேரன் யார் என்ற உண்மை தெரிந்து விட்டதாகவும் நேரில் விஷயத்தை சொல்வதாகவும் சொல்ல சாமுண்டீஷ்வரி வீட்டில் உள்ளவர்களிடம் வேறு காரணத்தை சொல்லி கிளம்புகிறாள்.
அப்போது சாமுண்டீஸ்வரி தடுமாறி கீழே விழ போக கொஞ்சம் நேரம் உட்கார்ந்து விட்டு போக சொல்கின்றனர். அடுத்து சாமுண்டீஸ்வரி மீண்டும் கிளம்ப அப்போது அவளை ஒரு பாம்பு சீண்டி விட வைத்தியச்சியை வீட்டிற்கு அழைத்து ட்ரீட்மென்ட் கொடுக்கின்றனர்.
இது விஷம் இல்லாத பாம்பு தான், பிரச்சனை இல்லை.. ஆனால் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி, தீபாவதி சந்திப்பு தள்ளி போகிறது. அடுத்து சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு ஜவுளி கடைக்காரர் ஒருவர் துணிகளை கொண்டு வருகிறார்.
சேலை எடுக்கும் போட்டி:
கார்த்திக் மாமா சாமியாட போவதால் வீட்டில் உள்ளவர்களுக்கு புது துணி எடுக்க வேண்டும் என்பதற்காக வர சொன்னதாக சொல்கிறான். அடுத்து அவரவர் அவங்க மனைவிக்கு பிடித்த புடவையை எடுத்து தர வேண்டும் என்ற போட்டி தொடங்குகிறது.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















