Youtuber Irfan : பிரச்னை என்கிட்ட இல்லை.. உன்கிட்டதான்.. இஸ்லாமிய மதவெறுப்பு பதிவுகளுக்கு பதில் கொடுத்த இர்ஃபான்
Irfan : யூடியூபர் இர்ஃபான் மீது மத ரீதியான கருத்துக்களை எழுப்பி வந்த நெட்டிசன்களுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் இர்ஃபான்.
இன்றைய காலகட்டத்தில் யூடியூப் பயன்பாடு என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. அதிலும் மூலை முடுக்கில் இருப்பவர்கள் கூட அவரவர்களின் திறமைகளை யூடியூப் மூலம் வெளிக்காட்டி இன்று பிரபலமான யூடியூபராக வலம் வருகிறார்கள். திரை நட்சத்திரங்களுக்கு இணையாக யூடியூபர்களும் மிகவும் பிரபலமான செலிபிரிட்டிகளாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் ஃபுட் பிளாகராக அறிமுகமாகி இன்று முன்னணி யூடியூபராக வலம் வருபவர் இர்ஃபான் (Youtuber Irfan).
குக்கு வித் கோமாளி போட்டியாளர்
2018ம் ஆண்டு முதல் யூடியூபராக இருந்து வரும் இர்ஃபானுக்கு மில்லியன் கணக்கான ஃபாலோயர்ஸ் உள்ளனர். அவர்களின் தேவைகளை விருப்பங்களை நன்கு அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு வெரைட்டியான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். பல வகையான உணவுகள் குறித்து அவர் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவர் யதார்த்தமாக உரையாடிக்கொண்டே வீடியோ வெளியிடுவது ரசிக்கும்படியாக இருப்பதை விரும்புகிறார்கள்.
மதவெறுப்பு கமெண்ட்டுக்கு பதில்
இந்திய அளவில் மட்டுமின்றி உலக நாடுகளில் இருக்கும் பிரபலமான ஹோட்டல்களுக்கு சென்று அங்கு இருக்கும் ஸ்பெஷல் உணவுகளை பற்றி வீடியோ எடுப்பது நல்ல வரவேற்பை பெற்றது. மத ரீதியாக பல பிரச்னைளை சந்தித்த போதிலும் வந்தபோதும் விடாமல் தன் மனதுக்கு சரி எனப்படும் விஷயங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் குக்காக என்ட்ரி கொடுக்க உள்ளார். இது வரை பல தரப்பட்ட உணவுகளையும் ருசித்து கருத்து சொல்லி வந்த இர்ஃபான் இனி சமைக்க போகிறார். அவரின் உணவு எப்படி இருக்கிறது என நடுவர்கள் கருத்து சொல்ல போகிறார்கள். நிச்சயம் சமையல் குறித்த பயிற்சியுடன்தான் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புது எனர்ஜியுடன் சமையல் களத்தில் இறங்கியுள்ள இர்ஃபான் மீது சில நெகட்டிவ் கருத்துக்களை சோசியல் மீடியாவில் எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். மத அடிப்படையில் பல சர்ச்சையை எழுப்பும் கருத்துக்களை சிலர் முன்வைத்து வந்தாலும் ஒரு சிலர் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சப்போர்ட்டாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
‘பிரச்னை உன்கிட்ட தான்..’
பெரும்பாலும் முஸ்லிம் கடைகளை மட்டும் தான் ப்ரொமோட் செய்கிறார். மற்ற கடைகளை ப்ரொமோட் செய்வது கிடையாது என சொன்னதற்கு "நான் எந்த வேறுபாடும் பார்க்கவில்லை. என்னிடம் எந்த பிரச்னையும் இல்லை. எல்லாவற்றிலும் ஜாதி பார்க்கும் உன்னிடம் தான் பிரச்சினை இருக்கிறது" என விமர்சகர் ஒருவரின் கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் இர்ஃபான். தற்போது ”வெறுப்பை பரப்பும் ஏராளமான விஷ உயிரினங்கள் பரவி வருகிறார்கள்” என விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக பதில் அளித்து இருந்தார் இர்ஃபான்.
குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி சில நாட்களில் துவங்க உள்ள நிலையில் அதில் இர்ஃபான் குக்காக என்ட்ரி கொடுக்க உள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொல்வதற்கு முன்னரே இது போன்ற பிரச்சனைகளால் அவர் திசை திரும்புவது அவரின் விளையாட்டை எந்த வகையிலும் பாதித்துவிடகூடாது என்பது தான் ரசிகர்களின் தீவிரமான எதிர்பார்ப்பு.