"யாருக்கு யோகி பாபுவின் ஓட்டு.?" - வெளியானது மண்டேலா ட்ரைலர்
மண்டேலா திரைபடத்தின் டிரைய்லர் வெளியாகிள்ள நிலையில் யோகிபாபுவின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்துள்ளது.
நகைச்சுவை நாயகன் யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சைலேந்திரா இயக்கத்தில் பரத் சங்கர் இசையில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படமாக மண்டேலா உருவாகியுள்ளது. அண்மைக்காலமாக பல படங்களில் கதையின் நாயகனாகவும் அதே போல முன்னணி கதாபாத்திரங்கள் ஏற்றும் நடித்துவருகிறார் யோகி பாபு.
"மண்டேலா", ஒரு கிராமத்தையும் அந்த கிராமத்தில் உள்ள இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான விஷயங்களை அழகாக இயக்குனர் அளித்துள்ளார் என்பதை ட்ரைலர் தெளிவாக காண்பிக்கிறது. அந்த அரசியல் கட்சிகளுக்கும் யோகிபாபுவிற்கும் இடையே என்ன உறவு என்பதை சுவாரசியம் கலந்த நகைச்சுவையோடு அளித்துள்ளது மண்டேலா.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/ES1Oz7cW11M" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
மூத்த நடிகர் சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சூப்பர் ஸ்டாரின் தர்பார் உள்ளிட்ட 9 படங்களில் தோன்றிய யோகி பாபு இந்த ஆண்டும் பல பண்டங்களில் நடித்து வருகின்றார்.