watch video | ”ரோகித் சர்மாவ விட அருமையா விளையாடுறியே தலைவா” - யோகிபாபு வீடியோவுக்கு குவியும் தெறி கமெண்டுகள்!
யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படம் தற்போது ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடியன்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா . இந்த படத்தில் முடி திருத்தும் நபராக நடித்து அசத்தியிருப்பார். அந்த படம் தற்போது ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழ் படம் மண்டேலாதான் எனவும் கூறப்படுகிறது.
ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் அண்ணன் @iYogiBabu அவர்கள் மண்டேலா திரைப்படம் தளபதி @actorvijay மக்கள் இயக்கம் சார்பில்
— ECR.P.Saravanan (@EcrPSaravanann) October 23, 2021
நாளை விருதுக்கு இன்றைய
வாழ்த்துக்கள்.... pic.twitter.com/YSpbaxPOlK
யோகி பாபு தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகானுடனும் காமெடியனாக களமிறங்கியுள்ளார். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். தொடர்ந்து படு பிஸியாக நடித்து வரும் யோகி பாபு , தற்போது கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
— Yogi Babu (@iYogiBabu) October 23, 2021
அதனை கண்ட ரசிகர்கள் “ரோகித் ஷர்மாவை விட அருமையாக விளையாடுரியே தலைவா “ என கமெண்டுகளை தெரிக்கவிட்டு வருகின்றன. இன்னும் சிலரோ “சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகத்திற்கு தயாராகி வருகிறார் யோகி பாபு “ என வெங்கட் பிரபுவையும் டேக் செய்து வருகின்றனர்.
ரோகித் சர்மாவ விட அருமையா விளையாடுரியே தலைவா.. 🔥
— 𐍃ᴛᴜɴɴᴇ𐍂 ☮ (@stunner_twtz) October 23, 2021
முகம் எப்படி இருக்குன்னு பெரிய பிரச்சினையே கிடையாது அவற்றிலுள்ள திறமைதான் முக்கியம் அந்த திறமைக்கு எடுத்துக்காட்டு நம்ம யோகி பாபு
— Joseph Robin (@JosephR17685087) October 23, 2021
Dear @vp_offl , @iYogiBabu is getting ready for Chennai-28 part-III...it will be full on..😀@Premgiamaren @thisisysr @btcinemas
— Vaithiyanathan Krishnamoorthy (@vaithi_ak) October 23, 2021
யோகி பாபு தற்போது பீஸ்ட், வலிமை உள்ளிட்ட படங்களை நடித்து முடித்துள்ளார். மேலும் காண்ட்ரக்டர் நேசமணி என்னும் படத்தில் ஓவியாவுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. அது தவிர ‘பேய் மாமா’ என்னும் நகைச்சுவை ஹாரர் திரைப்படம் , அறிமுக இயக்குநர் யாசின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீரப்பன் கஜானா’, முங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.