மேலும் அறிய

இந்திய படங்களில் முன்னிலை வகிக்கும் ஒரே தமிழ் படம்... 400K $ வசூலித்த 'யசோதா'

நடிகை சமந்தா நடிப்பில் மூன்று நாட்களுக்கு மின்னார் வெளியான 'யசோதா' திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்று அமெரிக்காவில் 400K$ வசூலித்துள்ளது

 

நடிகை சமந்தா நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான 'யசோதா' திரைப்படம் உலகளவில் உள்ள ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. சர்வதேச அளவில் வரவேற்பை பெற்ற இப்படம் அமெரிக்காவில் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்று 400K$ வசூலித்துள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இந்திய படங்களில் முன்னிலை வகிக்கும் ஒரே தமிழ் படம்... 400K $ வசூலித்த 'யசோதா

வுமன் சென்ட்ரிக் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு :

ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் ஹரி ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் 'யசோதா'. கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களே இப்படத்தின் கதைக்களம். படத்தின் டீசர். போஸ்டர், டிரெய்லர் என அனைத்துமே வெளியானது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வுமன் சென்ட்ரிக் திரைப்படமான யசோதா எதிர்பார்ப்பையும் தாண்டி சாதனை படைத்துள்ளது. வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.  

 

 

அமெரிக்காவில் வசூலில் சாதனை :

அந்த வகையில் வெளியான மூன்றே நாட்களில் அமெரிக்காவில் சாதனை படைத்துள்ளது யசோதா திரைப்படம். அமெரிக்காவில் டாப் 10 படங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழ் திரைப்படம் யசோதா. இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்று அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிஸில் 400K$ வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வார இறுதி நாட்களில் வசூல் செய்ததை போலவே திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் நல்ல வசூலை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முதல் நாளே உலகளவில் ரூ.3.5 கோடி வசூலித்த திரைப்படம் மலேசியாவில் 5வது இடத்தை பிடித்துள்ளது என கூறப்படுகிறது. இதன் மூலம் ஆர்ஆர்ஆர், பொன்னியின் செல்வன் 1 , காந்தாரா திரைப்படங்களை தொடர்ந்து சர்வதேச அளவில் அதிக அளவிலான வசூலை பெற்ற திரைப்படங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது சமந்தா நடித்துள்ள 'யசோதா' திரைப்படம். 

 

 

காட்சிகள் அதிகரிப்பு : 

தமிழ்நாட்டிலும் பட்டையை கிளப்பி வரும் யசோதா திரைப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருப்பதால் திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் வெளியான மிரள், டிரைவர் ஜமுனா, பரோல் உள்ளிட்ட படங்களோடு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது யசோதா திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. யசோதா திரைப்படத்திற்காக கடினமாக உழைத்த சமந்தாவின் திரை  வாழ்க்கையில்  இப்படம் நிச்சயமாக ஒரு மைல் கல்லாக அமையும் என்பது எந்த சந்தேகமும் இல்லை. 

 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget