‛வெந்து தணிந்தது காடு கதை இது தான்...’ போட்டு உடைத்த கதாசிரியர் ஜெயமோகன்!
வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் குறித்த பல புதிய தகவல்களை எழுத்தாளர் ஜெயமோகன் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் நடித்து வெந்து தணிந்தது காடு படம் குறித்த பல புதிய தகவல்களை எழுத்தாளர் ஜெயமோகன் பகிர்ந்துள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
View this post on Instagram
இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக்கத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கௌதம் மேனன் - எழுத்தாளர் ஜெயமோகன் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் கதை ஜெயமோகன் எழுதியிருந்தார். அதை கௌதம் மேனன் விரிவாக்கம் செய்து திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.
ஜெயமோகன் இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், வெந்து தணிந்தது காடு நீளமான படமாக இருக்கும். இது ஒரு முழு வாழ்க்கை கதையாகும். படம் மெதுவாகத் தான் செல்லும். ட்ரெய்லரின் வன்முறை காட்சிகள் இருப்பதைப் பார்த்து ஆக்ஷன் படம் என நினைக்காதீர்கள். இந்த படம் இப்போது உயிரோடு இருக்ககூடிய ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாறு தான். அதனாலேயே என்னால் இதனை முழு கதையாக பண்ண முடியவில்லை.
வெந்து தணிந்தது காடு படத்தின் கதையை புதுமுக ஹீரோவை வைத்து பண்ணுமாறு தெரிவித்தேன். கதைப்படி ஹீரோவுக்கு டிகிரி முடித்த வெளி உலகம் பற்றி ஒன்றுமே தெரியாத பையன் திருநெல்வேலி போன்ற ஊரையே மிகப்பெரிய நகரமாக பார்க்ககூடிய ஒரு பையன் அங்கிருந்து கிளம்பி மும்பை போறது தான் நான் எழுதுன கதை. அங்கேயே அது முடிந்து விட்டது. அதனால் கண்டிப்பாக பெரிய ஹீரோ அதனை பண்ண முடியாது என சொன்னேன். ஆனால் கௌதம் சிம்புவிடம் கேட்டு பார்ப்பதாக கூறிவிட்டு போட்டோஷூட் புகைப்படத்தை அனுப்பி வைத்தார். நான் சிம்பு தான் சரியாக இருக்கும் என ஒப்புக் கொண்டேன். ஒரிஜினல் கதையில் காதல் என்பது ஒரு சின்ன லைன் தான் இருக்கும். அதனால் கதையில் எந்தவித பாதிப்பும் இருக்காது என ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.ம்