முட்டிபோட்டு நடிச்சி காட்டினார் கே.எஸ் ரவிக்குமார் சார்.. லாஸ்லியா இல்லன்னா.. சர்ச்சைகளை பற்றி மனம்திறந்த தர்ஷன்..
அவருக்கு ஸ்ரீ லங்காவில் நிறைய ஃபேன்ஸ் இருப்பதாகவும், தர்ஷனின் நண்பர்கள் தினமும் அவரை பற்றி கேட்பார்கள் என்றும், விடியோ கால் செய்தீர்களா, என்ன நடந்தது செட்டில் என்று கேட்பார்கள் என்றும் கூறினார்
கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூகுள் குட்டப்பா. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபல இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில், பிக் பாஸ் தமிழ் சீசன் 3 புகழ் தர்ஷன்-லாஸ்லியாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பா. கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களான, சபரி மற்றும் சரவணன் ஆகியோரின் இயக்கத்தில், உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் தர்ஷன், மனோபாலா மற்றும் லாஸ்லியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய வேடத்தில் களம் இறங்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார் சொந்த தயாரிப்பி நிறுவனமான RK செல்லுலாய்ட் நிறுவனம் தயாரிக்க, கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படம் மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் ரீமேக் ஆகும். படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி கேஎஸ் ரவிக்குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்த திரைப்படத்தின் ட்ரைலரை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலர் வெளியான கொஞ்ச நேரத்தில் படு வைரலாக பரவி இணையத்தில் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலிடம் நல்ல பிள்ளையாக பெயர் வாங்கிய தர்ஷனை வைத்து தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் படம் தயாரிப்பதாக நம்மவர் உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து ‘தாய்க்குப்பின் தாரம்’ என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்த தர்ஷனுக்கு தற்போது கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் ‘கூகுள் குட்டப்பன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தமிழ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் 3 நிகச்சியின் மூலமாக பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இந்நிகழ்ச்சியில் கவின் உடனான காதல் பரபரப்பான பேசுபொருளாக மாறியது. பின்னர்,அவருக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்தது. இருப்பினும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். இன்று ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், இந்த படத்தின் கதாநாயகன் தர்ஷன் தன்னடக்கத்துடன் பேசினார். அவர் பேசுகையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் வேலை செய்த அனுபவத்தை பற்றி நெகிழ்ந்து பேசினார்.
ஒரு ஷாட்டில் இவருக்கு வராத ஒரு விஷயத்தை இப்படி செய் என்று அவரே இறங்கி வந்து முட்டி போட்டு நடித்து காண்பித்து அதே போல செய்யவைத்த அனுபவங்கள் அவ்வளவு எளிதாக வேறு யாருக்கும் கிடைத்துவிடாது, அந்த வகையில் நாங்கள் பாக்கியம் செய்துள்ளோம் என்று கூறினார். யோகி பாபு பற்றி கூறுகையில், அவருக்கு ஸ்ரீ லங்காவில் நிறைய ஃபேன்ஸ் இருப்பதாகவும், தர்ஷனின் நண்பர்கள் தினமும் அவரை பற்றி கேட்பார்கள் என்றும், விடியோ கால் செய்தீர்களா, என்ன நடந்தது செட்டில் என்று கேட்பார்கள் என்றும் கூறினார்.
அதுமட்டுமின்றி, செட்டில் கே.எஸ்.ரவிக்குமார் சாரும் யோகி பாபுவும் இணைந்து விட்டால் ரணகளமாக இருக்கும் என்றும் கூறினார். கே.எஸ். ரவிகுமாரிடம் ரஜினி, கமல் உடனெல்லாம் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி நிறைய பேசுவோம், செட்டிற்கு போனாலே எப்போது அவரது அனுபவங்களை பேசுவார் என்று காத்திருப்போம் என்றார். அவருடன் கதாநாயகியாக நடித்த லாஸ்லியா பற்றி கூறுகையில், அவர் இல்லாமல் இந்த படம் எனக்கு கடினமாக ஆகி இருக்கும், லாஸ்லியாவை தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தை செய்திருக்க முடியாது. அவர் என்பதால், இதை இப்படி செய்துகொல்லட்டுமா, அப்படி செய்துகொல்லட்டுமா என்று கேட்டு செய்ய முடிந்தது. பட அறிவிப்புகள் வந்ததில் இருந்து நிறைய சர்ச்சைகள் உருவெடுத்து கொண்டு இருந்தன. அதெல்லாம் பட வெளியீட்டிற்கு பிறகு உடையும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.