Dhanush Aishwarya Separation | காதல் கொண்டேன் முதல் நாள்..வீட்டுக்கு வந்த பூங்கொத்து: தனுஷ் - ஐஸ்வர்யா முதல் சந்திப்பு
திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக தனுஷும், ஐஸ்வர்யாவும் அறிவித்துள்ளனர்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவருக்கும், ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர். இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்திலும், ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் அறிவித்துள்ளனர்.
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022
இந்நிலையில் ஐஸ்வர்யாவின் எளிமை குறித்து தனுஷ் கூறிய வார்த்தைகளும், அவர்களது முதல் சந்திப்பு குறித்த நினைவலைகளும் தற்போது வைரலாகி வருகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒருமுறை பேசிய தனுஷ் ஐஸ்வர்யா குறித்து பகிர்ந்துகொண்டார். அதில்,'' எனக்கு ஐஸ்வர்யாவின் எளிமை மிகவும் பிடிக்கும். நாம் அவரது அப்பா ரஜினியை எளிமையானவர் என நினைக்கிறோம். ஆனால் ஐஸ்வர்யா அவரை விடவும் எளிமையானவர். அவரது அப்பாவை விட அவர் 100 மடங்கு எளிமையானவர். அவர் அனைவரிடத்திலும் ஒரே மாதிரி இருப்பார். யாரை வேண்டுமானாலும் நண்பர்களாக வழிநடத்துவார் என்றார்.
அதேபோல தங்களுடைய முதல் சந்திப்பு குறித்தும் தனுஷ் அந்த நேர்காணலில் பேசியுள்ளார். காதல் கொண்டேன் முதல் நாள் முதல் ஷோவின் போது படக்குழுவுடன் தனுஷும் சேர்ந்து படம் பார்த்துள்ளனர். படம் நிச்சயம் ஹிட் என அனைவருமே கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டுள்ளனர். படம் முடிந்து வெளியேறும் போது தியேட்டர் ஓனர் தனுஷை ஐஸ்வர்யாவிடமும், சவுந்தர்யாவிடம் அறிமுகம் செய்துள்ளார். அடுத்த நாள் பூங்கொத்து ஒன்றை அனுப்பிய ஐஸ்வர்யா, ''நல்ல வேலை பண்ணியிருக்கீங்க. இணைந்திருங்க'' என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து இருவருமே திருமணம் செய்துகொண்டனர்.
View this post on Instagram
முன்னதாக தங்கள் பிரிவு குறித்து அறிவித்த தனுஷ் -ஐஸ்வர்யா ஜோடி, “18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம். இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம். ஆனால், இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரையும் புரிந்து கொண்டு, இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய முடிவை ஏற்று எங்களது தனிமையை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்